SCROL

Monday, October 10, 2016

பண்டைய தமிழரின் பெருமைகள்

பண்டைய தமிழரின் பெருமைகள்

உலகம், விஞ்ஞானத்தின் உச்சத்தை எட்டினாலும், மனிதனின் வாழ்விற்கு மெய்ஞானத்தை புகட்டி வாழ வைத்தவன் நம் தமிழனே. பண்டைத் தமிழரின் பெருமை பற்றி இந்தக் கட்டுரையில் பார்ப்போம்..!

"தாய்மொழி ஊற்றாம், தமிழன் என்ற மரபாம்" என்ற சொல்லுக்கு ஏற்ப தமிழை வளர்த்தவர்கள் பழந்தமிழர்கள். உலகமே வியக்கும் வண்ணம் எண்ணிலடங்காத கருத்தை தமிழ் காப்பியங்கள் வாயிலாக எடுத்துரைத்து வரலாற்றில் சிறப்புற்று விளங்குகிறார்கள் தமிழர்கள். உலக மொழிகளான லத்தீன், லாவோஸ் போன்ற மொழிகள் போல பழமையும், பெருமையும் பெற்று விளங்கிய மொழி, தமிழ்மொழி. 247 எழுத்துகளில் உலகையே கட்டியிணைத்த மொழி.

அழகுக்கு அழகு சேர்ப்பதுபோல் அறிவுக்கு அறிவு சேர்த்து மகிழ்ந்தவன் நம் தமிழன். அதற்கு எடுத்துக்காட்டாக திகழ்வது ஐம்பெரும் காப்பியங்களே. வீரச்சுவை, இனிமைச் சுவை, மருந்து, இயற்கை என்று அனைத்திற்கும் பழங்காலத்தே படைப்பு கண்டவன் தமிழனே. உலகின் உயிர்வளம், இயற்கை வளம், செல்வ வளம், போர்த்திறன், செயல் திறன், அரசியலமைப்பு போன்றவற்றை தனது காப்பியங்களிலேயே கண்முன் நிறுத்தியவன் பழந்தமிழன்.

தமிழ் மொழியானது உலகின் முதன்மொழி என்று ஆராய்ச்சியாளர்கள் பலர் நிரூபித்துள்ளனர். ஆதிமனிதன் பேசிய மொழியும் தமிழே. இப்போது வழக்கில் இருக்கும் பல மொழியின் ஆதிமூலமும் தமிழ்மொழியே. ஜப்பானிய மொழி, சீன மொழி, லத்தீன் போன்ற மொழிகளிலும் தமிழ்ச்சொற்கள் கலந்துள்ளன. ஆனால் தமிழ் மொழியோ எந்த ஒரு மொழியின் கலப்பினையும் பெறாமல் தனித்து இயங்கக்கூடியது.

சமீபத்தில் நடந்த ஆராய்ச்சியில் பழந்தமிழர்களே ஆதிமனித இனம் என்று கண்டறியப்பட்டுள்ளது. உலக மக்களின் "டி.என்.ஏ" அதாவது மரபணுக்கள் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு அந்த ஆய்வு நடத்தப்பட்டது. அதில் 25 சதவீதம் தமிழர்களுடையது. அவை ஆதிகால மனிதனின் மரபணுக்களோடு ஒப்பிடப்பட்டது. ஆதிமனிதனின் மரபணுக்களும், தமிழர்களின் மரபணுக்களும் அதிகளவில் ஒத்துப்போனது தெரியவந்துள்ளது.

பல அறிவியல் புதிர்களுக்கு தமிழன் ஆதிகாலத்திலேயே விடைகள் கண்டுபிடித்துள்ளான். அதற்கு ஒரு எடுத்துக்காட்டு, "அணுவை துளைத்து ஏழ்கடலை புகட்டி" என்ற வாசகம், அதாவது நாம் இந்த நவீன யுகத்தில்தான் அணுவின் பயன்பாடுகளை அறிந்துள்ளோம். தமிழன் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அணு பற்றி அறிந்திருந்தான் என்பதையே அந்த வாசகம் சுட்டுகிறது. நாம் இப்போது காணும் பல்வேறு தொழில்நுட்ப- மருத்துவ சிறப்புகள் அக்காலத்திலேயே பழந்தமிழரிடையே வழக்கில் இருந்துள்ளது.

தமிழன் கை வைத்த இடமெல்லாம் பொன் என்பதுபோல அவர்கள் கட்டிய கட்டிடங்களும் வரலாற்றில் பேசப்படுகிறது. ஒரே கல்லில் செய்யப்பட்ட தஞ்சை பெரிய கோவிலும், அதன் ராஜகோபுரத்தையும் எடுத்துக் காட்டாக கூறலாம். மொகஞ்சதாரோ போன்ற பல வரலாற்று நாகரிகம் பொருந்திய கட்டிடங்களுக்கு அடித்தளம் அமைத்தவர்கள் பழந்தமிழர்களே என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment