அசத்துது குட்டி கார் இதுதான் இப்ப சிட்டி கார்!

அசத்துது குட்டி கார் இதுதான் இப்ப சிட்டி கார்!

சில வருடங்களுக்கு முன், 'ஸ்மார்ட்' என்ற குட்டிக் கார், ஐரோப்பாவில் அறிமுகமாகி கலக்க ஆரம்பித்தது. அதில் ஒருவர் மட்டுமே அமர முடியும். பின்புறம் இருவர் அமரும் மாடல் வந்தது. சமீபத்தில், 'ஸ்மார்ட் மின்சார கார்கள்' வந்துள்ளன. ஒருவர் மாடல், இருவர் மாடல் என இரண்டும் அறிமுகமாகியுள்ளன. விரைவில் நால்வர் அமரும் மாடலும் வரும் என்று ஸ்மார்ட் அறிவித்துள்ளது. இரண்டு பேர் அமரும், 'கேப்ரியோ' ஸ்மார்ட் காரை, ஒரு முறை மின்னேற்றம் செய்தால், 160 கி.மீ., வரை பயணிக்கலாம். இதன் வேகம்தான் பலரை அசத்துகிறது. மணிக்கு, 130 கி.மீ., வேகத்தில் ஸ்மார்ட் மின் காரை ஓட்ட முடியும். நகர்புறத்து வாகனமாகவே இதை ஸ்மார்ட் முன்வைக்கிறது. இதன் சுற்றுச்சூழலுக்கு நட்பான தன்மை, பார்க்கிங் எளிமை மற்றும் அற்புதமான ஸ்டைலிங் ஆகியவற்றை முன்வைத்து விற்பனையை பெருக்கி வருகின்றன ஸ்மார்ட் கார்கள். காரின் சைஸ் மினி என்றாலும் அதன் விலை மெகா. அதிகமில்லை, 16.5 லட்சம் ரூபாய்தான்!

No comments:

Post a Comment