தொழில்நுட்ப தேர்வு முடிவு : கலை ஆசிரியர்கள் சந்தேகம்

தொழில்நுட்ப தேர்வு முடிவு : கலை ஆசிரியர்கள் சந்தேகம்

ஓவியம், கலை படிப்புகளுக்கான, தேர்வின் விடைத்தாள் நகல்களை வழங்க வேண்டும்' என, கலை ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஓவியம், கலை, தையல், கைவினை உள்ளிட்ட, பல்வேறு தொழில்நுட்ப படிப்புகளுக்கு, அரசு தேர்வுத்துறை சார்பில், 2015 நவம்பரில் தேர்வு நடந்தது.இதன் முடிவுகள், நேற்று முன்தினம் வெளியிடப்பட்டு, தேர்வு மையங்களில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன;இதில், கேரளா, ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலத்தவர், அதிக தேர்ச்சி பெற்றுஉள்ளனர். தமிழகத்தை சேர்ந்த, 40 சதவீதம் பேர் தேர்ச்சி பெறவில்லை என, தெரிய வந்துள்ளது. அவர்களுக்கு, விடைத்தாள் சரியாக திருத்தம் செய்யப்பட்டதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதற்கு தீர்வு காணும் வகையில், விடைத்தாள் நகல்களை வழங்கும்படி கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து, கலை ஆசிரியர் நல சங்க தலைவர் எஸ்.ஏ.ராஜ்குமார் கூறுகையில், ''விடைத்தாள் நகல்கள் வழங்கவும், மறுமதிப்பீடு செய்யவும், அரசு தேர்வு துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.

No comments:

Post a Comment