விமான நிறுவனத்தில் ‘உதவி விமானி’ வேலை

விமான நிறுவனத்தில் 'உதவி விமானி' வேலை

 

விமான நிறுவனத்தில் உதவி விமானி வேலை அறிவிக்கப்பட்டு உள்ளது.இது பற்றிய விவரம் வருமாறு:-பொதுத்துறை விமான நிறுவனமான ஏர் இந்தியா நிறுவனத்தின் துணை நிறுவனங்களில் ஒன்று ஏர் இந்தியா சாட்டர்ஸ் லிமிடெட். தற்போது இந்த நிறுவனத்தில் டிரைனி கோ பைலட் (பயிற்சி உதவி விமானி) மற்றும் கேபின் குரூவ் பணிகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. கோ பைலட் பணிக்கு 70 இடங்களும், கேபின் குரூவ் பணிக்கு 170 இடங்களும் உள்ளன. மொத்தம் 240 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.இட ஒதுக்கீடு வாரியாக கோ பைலட் பணியிடங் களில் பொது - 37, .பி.சி.- 18, எஸ்.சி.- 10, எஸ்.டி.-5 இடங்கள் உள்ளன. இதேபோல கேபின் குரூவ் பணியிடங்களில் பொது -87, .பி.சி.- 43, எஸ்.சி.- 28, எஸ்.டி.-12 இடங்கள் உள்ளன.இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்ப்போம்...

வயது வரம்பு:

கோ பைலட் பணிக்கு 40 வயதுக்கு உட்பட்டவர்களும், கேபின் குரூவ் பணிக்கு 22 வயதுக்கு உட்பட்டவர்களும் விண்ணப்பிக்கலாம்.

கல்வித்தகுதி:

சி.பி.எல்., .ஆர்.டி.., ஆர்.டி.ஆர் போன்ற விமான பைலட் லைசென்ஸ் பெற்றவர்கள் கோ-பைலட் பணிக்கு விண்ணப்பிக்கலாம். இவர்கள் பாஸ்போர்ட் மற்றும் 500 மணி நேரம் விமானம் ஓட்டிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.கேபின் குரூவ் பணிக்கு பிளஸ்-2 படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ஓட்டல் மேனேஜ்மென்ட், கேட்டரிங் படித்த வர்களுக்கு முன்னுரிமை வழங்கப் படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். இறுதியாக பூர்த்தியான விண்ணப்பத்தை கணினிப் பிரதி எடுத்து சொந்த உபயோகத்திற்காக வைத்துக் கொள்ளவும். இதற்கான அறிவிப்பு வெளியான நாளில் இருந்து 15 நாளைக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான அறிவிப்பு அக்டோபர் 29- நவம்பர்-4 தேதியிட்ட எம்ப்ளாய்மென்ட் நியூஸ் இதழில் இடம் பெற்றுள்ளது.விண்ணப்பிக்கவும் விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.airindiaexpress.in என்ற இணைய தளத்தைப் பார்க்கலாம்.

No comments:

Post a Comment