வழக்கறிஞர் - ஆராய்ச்சியாளர் வேலை

வழக்கறிஞர் - ஆராய்ச்சியாளர் வேலை

 

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையமான யூ.பி. எஸ்.சி., உள்துறை அமைச்சகத்தின் சி.எப்.எஸ்.எல். மருத்துவ அறிவியல் ஆய்வு பிரிவுக்கு ஆராய்ச்சியாளர் பணியிடங்கள், முதுநிலை ஆராய்ச்சியாளர் பணியிடங்கள் உட்பட 74 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில் அதிகபட்சமாக சி.பி.. பிரிவில் 47 வழக்கறிஞர்கள், 15 உதவி வழக்கறிஞர்கள், மருத்துவ அறிவியல் ஆய்வு மையத்தில் 7 விஞ்ஞானி பணிகள் உள்ளன.மருத்துவ படிப்பு மற்றும் சட்டப்படிப்பு படித்து குறிப்பிட்ட அனுபவம் உள்ளவர்களுக்கு பணி உள்ளது. அந்தந்த பணிக்கான கல்வித்தகுதி மற்றும் வயது வரம்பு விவரங்களை இணையதளத்தில் பார்க்கலாம்.விருப்பம் உள்ளவர்கள் குறிப்பிட்ட கட்டணம் செலுத்தி, 10-11-2016-ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். இது பற்றிய விரிவான விவரங்களை www.upsc.gov.in மற்றும் upsconline.nic.in என்ற இணையதளத்தில் பார்க்கவும்.

No comments:

Post a Comment