SCROL

Wednesday, October 26, 2016

விபத்து இல்லாமல் பட்டாசுகளை வெடிப்பது எப்படி? மாணவர்களுக்கு செயல் விளக்கம் அளிக்க கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவு

விபத்து இல்லாமல் பட்டாசுகளை வெடிப்பது எப்படி? மாணவர்களுக்கு செயல் விளக்கம் அளிக்க கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவு

தீபாவளி பண்டிகை கொண்டாட்டத் தின்போது விபத்து ஏற்படாமல் பட்டாசுகளை வெடிப்பது குறித்து பள்ளி மாணவ-மாணவிகளுக்கு செயல்விளக்கம் அளிக்குமாறு கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.இது தொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரி களுக்கு அவர் அனுப்பியுள்ள ஒரு சுற்றறிக்கையில் கூறியிருப்ப தாவது: தீபாவளி பண்டிகை வரும் 29-ம் தேதி (சனிக்கிழமை) கொண் டாடப்படவுள்ளது. இத்தகைய மகிழ்ச்சிகரமான நன்னாளில் கவனக்குறைவாக பட்டாசு வெடிப் பதால் தீ விபத்து ஏற்பட்டு உயிர் மற்றும் பொருட்சேதங்கள் ஏற் பட்டுவிடுகின்றன. மேலும், மாணவர் களுக்கு தீக்காயங்களும் சில நேரங்களில் பார்வை இழப்பும் ஏற்படுகிறது. இத்தகைய நிகழ்வு களை தவிர்ப்பதும் தடுப்பதும் நமது முக்கிய கடமையாகும். எனவே, விபத்துகள் இல்லாமல், மகிழ்ச்சியாக தீபாவளியை கொண் டாட பள்ளி மாணவ மாணவிகள் அறியும் வண்ணம் செயல்முறை விளக்கம் வேண்டும். பட்டாசுகளை கொளுத்தும்போது மாணவர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள்:

  •  விலங்குகளைத் துன்புறுத்தும் வகையிலும் அவை பயப்படும் வகையிலும் பட்டாசுகளை வெடிக்க வேண்டாம்.
  • பட்டாசுகளைக் கொளுத்தும் போது தளர்வான ஆடைகளை உடுத்துவதை தவிருங்கள். டெரிகாட்டன், டெர்லின் ஆகிய எளிதில் தீப்பற்றக்கூடிய ஆடை களை கண்டிப்பாக அணியக் கூடாது.
  •  பட்டாசுகளைக் கொளுத்து மிடத்துக்கு அருகில் ஒரு வாளி நிறைய தண்ணீர் வைத்துக் கொள்ள வேண்டும்.
  •  பட்டாசுகளைக் கொளுத்தி கையில் வைத்துக்கொண்டோ உடலுக்கு அருகிலோ வெடிக்க வேண்டாம். மாறாக பாது காப்பான தொலைவில் வைத்தே வெடிக்க வேண்டும்.
  •  மூடிய பெட்டிகள், பாட்டில்களில் பட்டாசுகளை உள்ளிட்டு கொளுத்தி வெடிக்கக் கூடாது.
  •  ராக்கெட்களை வெட்ட வெளி யில் குடிசைகள் இல்லாத பகுதி களில் மட்டுமே விட வேண்டும்.
  •  கூட்டமான பகுதிகளிலும் தெருக்களிலும் பட்டாசுகளை வெடிக்கக் கூடாது.
  •  பட்டாசுகளை விற்பனை செய் யும் கடைக்கு முன்போ, அரு கிலோ வெடிக்கக் கூடாது.
  •  பெற்றோர்களின் முன்னிலை யில் அவர்களின் பாதுகாப்பின் கீழ் குழந்தைகள் பட்டாசுகளை வெடிக்க வேண்டும்.
  •  மருத்துவமனைக்கு அருகில் பட்டாசுகளை வெடிக்கக் கூடாது.
  •  பெட்ரோல் சேமித்து வைக்கப் பட்டுள்ள இடங்களுக்கு அருகில் பட்டாசுகளை வெடிக் கவோ கொளுத்தவோ கூடாது.
  •  இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை பட்டாசுகளை வெடிக்க வேண்டாம்.
  •  அதிக சத்தம் கொண்ட பட்டாசு களை வெடிக்க வேண்டாம். ஏனெனில் அது உடலையும் மனநிலையையும் பாதிக்கும். காதுகளை செவிடாக்க கூடும்.
 பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் தினமும் காலை இறை வணக்கத் துக்கு பிறகோ அல்லது அணி திரளும் போதோ சுமார் 5 நிமிடங்களுக்கு தீ பாதுகாப்பு நட வடிக்கைகள் குறித்து மாணவர் களுக்கு எடுத்துச்சொல்ல வேண் டும். வெடிக்காத பட்டாசுகளைக் குனிந்து பரிசோதிப்பதை தவிர்க்கு மாறு மாணவர்களுக்கு அறிவுரை கூற வேண்டும். இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.




No comments:

Post a Comment