தேவைக்கேற்ப சுருங்கி விரியும் வீடுகள்!

தேவைக்கேற்ப சுருங்கி விரியும் வீடுகள்!

அமெரிக்காவில் தேவைக்கேற்ப சுருங்கி - விரியும் ரெடிமேடு வீடுகள் விற்பனைக்கு வந்துள்ளன. இட நெருக்கடியும், மக்கள் பெருக்கமும் அடிப்படைத் தேவையான வசிப்பிடங்களுக்கு பெரும் சவாலை ஏற்படுத்துகின்றன. இதற்கு தீர்வாகும் வகையில் கட்டுமான துறையில் பல்வேறு நுட்பங்களில் வீடுகள் வடிவமைப்பு நடக்கிறது. 'டின்னி ஐடாஹோம்ஸ்' நிறுவனம், மிகச்சிறிய அளவில் சிறந்த ரெடிமேடு வீடுகளை தயாரித்து வழங்குவதை வாடிக்கையாக கொண்டுள்ளது. 26 அடி நீளமுள்ள இந்த ரெடிமேடு வீட்டில் தேவைக்கேற்ப விரிவடையச் செய்து கூடுதலாக 2 அறைகளை தற்காலிகமாக உருவாக்கலாம். இதற்காக நகரும் 'ஸ்லைடு' வடிவில் அறைகள் உருவாக்கப்பட்டு உள்ளன. பொத்தானை அழுத்தினால் இது நகர்ந்து கூடுதலாக 2 அறைகளை தரும். இல்லாவிட்டால் சுருங்கிய நிலையில் உள்ளறைகளாக இருக்கும். புதுமையான இந்த வீடு 68 ஆயிரத்து 899 அமெரிக்க டாலர் விலையில் உருவாக்கித் தரப்படுகிறது.

Comments