உயர் கல்வியின் தரம் மேம்படுத்தப்படும்: ஜாவடேகர் உறுதி"!!

உயர் கல்வியின் தரம் மேம்படுத்தப்படும்: ஜாவடேகர் உறுதி"!!

உயர் கல்வியின் தரம் மேம்படுத்தப்படும் என்று மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் உறுதியளித்தார்.மத்தியப் பல்கலைக்கழகங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம், உத்தரப் பிரதேச மாநிலம், வாராணசியில் உள்ள பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்தில் (பிஹெச்யு) வியாழக்கிழமை நடைபெற்றது.மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், 14 மத்தியப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தில், ஜாவடேகர் பேசியதாவது:கல்வி, அறிவை மட்டும் தராமல், நற்பண்புகள் நிறைந்த மனிதர்களையும் உருவாக்குகிறது.எந்தவொரு தேசம், சிறந்த பல்கலைக்கழகங்களைப் பெற்றிருக்கிறதோ, அதுவே வளர்ச்சியடையும். நாலந்தா, தக்ஷசீலம், விக்ரமஷீலா போன்றவை பண்டைய இந்தியாவின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களாகும்.சுதந்திரப் போராட்ட வீரர்கள், விடுதலை இயக்கத்தை வளர்க்கின்ற, சமூக மறுமலர்ச்சியை ஏற்படுத்துகின்ற கருவியாகக் கருதி கல்வி நிலையங்களை நிறுவினார்கள். இதே காரணங்களுக்காக, பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்தை நிறுவிய பண்டித மதன்மோகன் மாளவியாவைப் பாராட்டுகிறேன். பல்கலைக்கழகங்களில் உயர் கல்வியின் தரம் மேம்படுத்தப்படும் என்றார் அவர்.

No comments:

Post a Comment