அரசு நிறுவனங்களிடம் 'ஆதார்' சேவை பணிகள் !

அரசு நிறுவனங்களிடம் 'ஆதார்' சேவை பணிகள் !

ஆதார்' சேவை மையங்களின் நிர்வாகிக்கும் பொறுப்பு எல்காட், அரசு கேபிள் 'டிவி' நிறுவனங்களுக்கு மாற்றப்பட்டு உள்ளது.மத்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு பதிவாளரின் கட்டுப்பாட்டில், 'ஆதார்' சேவை மையங்கள் செயல்பட்டன. தமிழகத்தில் கலெக்டர், தாலுகா அலுவலகங்கள், 'இ-சேவை' மையங்கள் மூலம் 'ஆதார்' சேவை வழங்கப்பட்டது. கைரேகை, கருவிழி, விபரங்கள் பதிவுப் பணிகளை பெங்களூரு 'பெல்' நிறுவனம் நிர்வகித்தது.தற்போது, இந்த தொழில்நுட்பம் உட்பட 'ஆதார்' சேவைப் பணிகளை எல்காட், அரசு கேபிள் 'டிவி' நிறுவனம் மூலம் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.கலெக்டர் அலுவலகம், மாநகராட்சி, நகராட்சிகளில் 'எல்காட்' நிறுவனமும்; தாலுகா அலுவலகம், பேரூராட்சி, ஊரக பகுதிகளில் கேபிள் 'டிவி' நிறுவனமும் பணிகளை மேற்கொள்ளும்.'எல்காட்' அதிகாரி ஒருவர் கூறுகையில், 'ஆதார் சேவை பணிகள் தொய்வின்றி நடக்கவும், பதிவு விபரங்களின் உண்மைத் தன்மை குறித்து ஆராய எளிதான முறைகளை கொண்டு வரவும், நிர்வாக மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன' என்றார்.

No comments:

Post a Comment