பாதுகாப்புக்கு உதவும் ‘டச்பாயின்ட்’

பாதுகாப்புக்கு உதவும் 'டச்பாயின்ட்'

கதவைத் தட்டுபவர்கள் யார் என்பதை வீட்டுக்குள் இருந்தபடி அறிந்து கொண்டு பாதுகாப்பாக செயல்பட பல கருவிகள் இருக்கின்றன. இப்படி பாதுகாப்புக்கு உதவும் மேலும் ஒரு புதிய கருவியை வடிவமைத்திருக்கிறார் லண்டன் ராயல் கலைக்கல்லூரி மாணவர் கிறிஸ்டியன் நாபிலோக். முதுகலை படிப்புக்கான பயிற்சித்திட்டத்திற்காக அவர் இந்த கருவியை உருவாக்கினார்.இளஞ்சிவப்பு வண்ணத்தில் காணப்படும் இந்த ஏர்பி.என்.பி. (Airbnb) கருவியை கதவில் பொருத்தி வைக்கலாம். வீட்டிற்கு வருபவர்கள் ஸ்மார்ட்போனால் இந்த கருவியை தொட வேண்டும். உடனே ஸ்மார்ட்போனில் ஒரு இணைய பக்கம் திறக்கும். அதன் மூலம் வீட்டினுள் இருப்பவர், வந்திருப்பவர் யார் என்பதை அடையாளம் காண முடியும், வந்திருப்பவர் முன்பின் அறியாதவர் என்றால், அவர்களிடம் வைபை உதவியுடன் குறுந்தகவல் பரிமாற்றம் நடத்தி பேசலாம். அவசியம் ஏற்பட்டால் கதவை திறக்காமலே பாதுகாப்பாக பேசி அனுப்பிவிடலாம். அதேபோல ஒவ்வொரு அறையிலும் இந்த கருவியை பொருத்தி வைத்துக் கொண்டால், உறவினர்கள் அல்லது நண்பர்களை பக்கத்து அறையில் தங்க வைத்திருந்தால் இந்த கருவியை பயன்படுத்தி அறைக்குச் செல்லாமலே தகவல் பரிமாற்றம் செய்யலாம். இதற்கான அப்ளிகேசனை நிறுவிக் கொண்டால் சுலபமாக தொடர்பு கொள்ளலாம். இல்லாவிட்டால் தற்காலிகமாக இணைய பக்கம் திறக்கும்.

No comments:

Post a Comment