வேக சாதனை படைத்தது மின்சார 'வென்ச்சூரி'

வேக சாதனை படைத்தது மின்சார 'வென்ச்சூரி'

மின்சார வாகனங்கள் பரவ ஆரம்பித்திருக்கும் இந்த நேரத்தில்ஒரு சக்திவாயந்த மின்சார காரால் எத்தனை வேகமாக பயணிக்க முடியும் என்ற கேள்வி எழுவது இயற்கைதான். அமெரிக்காவின் யூடா மாகாணத்தில்வென்ச்சூரி மற்றும் ஒஹையோ பல்கலைக்கழகத்தின் வாகன ஆய்வு மையமும் சமீபத்தில் அதை சோதித்து பார்த்துள்ளன. இந்த சோதனையில் 'வென்ச்சூரி வி.பி.பி 3' என்ற மின் வாகனம்மணிக்கு, 548 கி.மீ.வேகத்தில் புயலாகப் பாய்ந்து உலக தரை போக்குவரத்தில் சாதனை படைத்திருக்கிறது. இதற்கு முன், 2010ல்மணிக்கு, 494 கி.மீ.வேகத்தை எட்டி உலக தரை வேக சாதனை படைத்தது. இப்போது அதே அணியினர்தங்களது முந்தைய சாதனையை முறியடித்துள்ளனர். "எங்கள் முந்தைய சாதனையை நாங்களே முறியடிக்க சில வருடங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது," என்கிறார் வென்ச்சூரியை ஓட்டிய ரோஜர் ஸ்ரோயர். சோதனை நடந்த இடத்தில்முன் பல முறை மழைவேகமான காற்று போன்ற பருவநிலைகள் காரணமாகசோதனை ரத்து செய்யப்பட்டது. ஆனால்பல்கலைக்கழகமும்வாகன தயாரிப்பாளரும் இணைந்து செயல்படும்போது எதுவும் சாத்தியம் என்பதற்கு வென்ச்சூரி ஒரு உதாரணம் என்கிறார் ரோஜர். இன்று உலகிலேயே அதிக சக்தி வாயந்தவேகமான மின்சார கார் வென்ச்சூரி தான்.

No comments:

Post a Comment