உலகின் முதலாவது 'ஹைட்ரஜன்' ரயில்

உலகின் முதலாவது 'ஹைட்ரஜன்' ரயில்

நகர போக்குவரத்து ரயில்களில் இப்போது பெரும்பாலானவை மின்சாரத்தில் அல்லது டீசலில் இயங்குகின்றன. இவற்றுக்கு மாற்றாக, 'பியூயல் செல்' எனப்படும் எரிபொருள் கலன்கள் மூலம் இயங்கும் 'கொராடியா ஐலின்ட்' என்ற ரயிலை உருவாக்கியிருக்கிறது 'அல்ஸ்தாம்.' ஆக்சிஜன் மற்றும் ஹைட்ரஜன் ஆகியவற்றை கொண்ட எரிபொருள் கலன் மின்சாரத்தை உற்பத்தி செய்ய, அந்த மின்சாரத்தில் இயங்குகிறது கொராடியா ஐலின்ட். மின்சாரம் தயாரிக்கும் கலனிலிருந்து சிறிதளவு நீராவியும், தண்ணீரும் மட்டுமே வெளியேறுகிறது. இதனால் புகையோ, அதிக சத்தமோ இல்லாமல் சுற்றுச் சூழலுக்கு நட்புடன் பயணிக்கிறது அந்த ரயில். பயணிகள் பெட்டிகளுக்குள்ளே விளக்குகள் போன்றவற்றின் மின் தேவைக்கு மட்டும் ஏதாவது நிலையங்களில் அவ்வப்போது மின்னேற்றம் செய்து கொள்ளலாம். உலகின் முதல் ஹைட்ரஜன் எரிபொருள் ரயில் இது என்கிறது அல்ஸ்தாம். ஒரு முறை எரிகலனை நிரப்பினால், 300 பயணிகள் வரை ஏற்றிக்கொண்டு, 600 கி.மீ., வரை இந்த ரயில் பயணிக்கிறது. முதல் வர்த்தக ரீதியில் கொராடியா ஐலின்ட் ரயில்களை விற்க அல்ஸ்தாம் திட்டமிட்டுள்ளது.

No comments:

Post a Comment