SCROL

Sunday, October 2, 2016

ரயிலில் 'மொபைல் சிக்னல்' பிரச்னை இனி இல்லை!

ரயிலில் 'மொபைல் சிக்னல்' பிரச்னை இனி இல்லை!

ரயில் பெட்டிகளில் மொபைலுக்கு, 'சார்ஜ்' போட வசதி உண்டு. ஆனால், ரயில் நகர ஆரம்பித்ததும், 'சிக்னல்' கிடைப்பது தான் பெரிய சவால். இதற்கும் ஒரு வழியை கண்டுபிடித்திருக்கிறது, சுவிட்சர்லாந்திலுள்ள இகோல் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஒரு ஆய்வுக் குழு. ரயிலின் ஜன்னலுக்கு சாதாரண கண்ணாடிக்கு பதில், புதிய வகை கண்ணாடியை பொருத்தினால் சிக்னல் சூப்பராக கிடைப்பதை, பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டறிந்து உள்ளனர்.இந்த புதிய வகை கண்ணாடியில் மெல்லிய உலோக படலம் சேர்க்கப்பட்டு, லேசர் மூலம் பதப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் ஒளியையும், மின்காந்த அலைகளையும் தாராளமாக ரயிலுக்குள் அனுமதிக்கிறது அந்தக் கண்ணாடி. அதே சமயம், வெப்பம் மற்றும் குளிரை சிறப்பாக வடிகட்டி விடுகிறது. இந்த கண்ணாடியை பொருத்திவிட்டால், மொபைல் பேசுபவர்கள், ஜன்னலுக்கு அருகே நின்று கொண்டால் போதும்; சிக்னல் இல்லை என்ற தொல்லை இனி இல்லை!

No comments:

Post a Comment