பிரிட்டிஷ் கவுன்சில் ஆங்கில பயிற்சி -சேர்க்கைக்கு முன்பதிவு தொடக்கம்

பிரிட்டிஷ் கவுன்சில் ஆங்கில பயிற்சி -சேர்க்கைக்கு முன்பதிவு தொடக்கம்

சென்னையில் உள்ள பிரிட்டிஷ் கவுன்சிலின் ஆங்கில மொழி மையத்தில் புதிய பயிற்சிகளுக்கான சேர்க்கை முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் கவுன்சில் ஆங்கில மொழி மையம் ஆங்கில மொழி தொடர்பான பயிற்சிகளை வழங்கி வருகிறது. தெள்ளத் தெளிவாக கற்பிக்கும் நோக்கத்துடன் சான்று பெற்ற ஆசிரியர்கள் அவ்வப் போது ஆலோசனைகளை வழங் குவது இதில் முக்கிய அம் சமாகும். ஆங்கிலத் திறனை மேம்படுத்த ஒரு முழு அளவிலான ஆங்கில சங்கம், திரைப்படம் வாயிலாக ஆங்கிலத்தை புரிந்து கொள்ளுதல், குழந்தைகளுக் கான கதை சொல்லும் அமர்வு, நூலகத்தில் ஆங்கிலத்துக்கென பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட மண்டலம், நூலக உறுப்பினரா வதற்கு சிறப்பு தள்ளுபடி போன்றவை இதில் அடங்கும். புதிய பயிற்சிகள் நவம்பர் 6-ம் தேதி தொடங்குகின்றன. விருப்பமுள்ளவர்கள் நவம்பர் 5 அல்லது அதற்கு முன்பாக முன்பதிவு செய்யலாம். மாண வர்களின் தற்போதைய மொழித் திறனை அறிந்து பயிற்சிகள் அளிக்க ஏதுவாக தகுதி நிலை சோதனை மூலம் பயிற்சிகள் அளிக்கப்படும். ஒரு பயிற்சி வகுப்பை நிறைவு செய்தவர் அடுத்த இரு பருவ பயிற்சிகளில் சேர கட்டணத்தில் 20 சதவீத தள்ளுபடி கிடைக்கும். இச்சலுகை 31.12.2016 வரை கிடைக்கும். 7 முதல் 15 வயது குழந்தைகளுக்கு, 16 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு என ஒவ்வொருவருக்கும் ஏற்ற பயிற்சிகள் உள்ளன. பதிவு செய்யவும் மேலும் விவரங்களுக் கும் 01204569000/01206684353 என்ற எண்ணில் தொடர்பு கொள்ள லாம். அல்லது Winya.Suzanna@in.britishcouncil.org என்ற இமெயிலில் தொடர்பு கொள்ள லாம். English என்று டைப் செய்து 567678 என்ற எண்ணுக்கும் SMS செய்யலாம்.

 

 

No comments:

Post a Comment