பள்ளியில் துணைப்பாடங்களுக்கு வகுப்பு இருக்கு; புத்தகம் இல்லை!!!

பள்ளியில் துணைப்பாடங்களுக்கு வகுப்பு இருக்கு; புத்தகம் இல்லை!!!

பள்ளிகளில் துணை பாடங்களுக்கு வகுப்பு ஒதுக்கப்பட்டும், புத்தகம் வழங்கவில்லை. இதனால் மாணவர்களுக்கு துணை பாடங்கள் நடத்துவதில்லை.பள்ளிக் கல்வித்துறை சார்பில் 6 முதல் பிளஸ் 2 வரை மாணவர்களுக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம் உள்ளிட்ட முதன்மை பாடங்களோடு, அறிவியல் தமிழ், சுற்றுச்சூழல் கல்வி, நன்னெறி, இசை, உடற்கல்வி போன்ற துணை பாடங்களும் உள்ளன. அறிவியல் தமிழ் பாடத்தில் அறிஞர்களின் வாழ்க்கை வரலாறு, கண்டுபிடிப்புகள், கலைச் சொற்கள், வரையறைகள் உள்ளிட்டவை எளிய தமிழில் இடம் பெற்றிருக்கும்.இதன்மூலம் எளிமையாக அறிவியலை மாணவர்கள் புரிந்து கொள்ள முடியும். சுற்றுச்சூழல் கல்வியில் விலங்குகள்,மரங்கள், புவி அமைப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்றவை கதை வடிவில் இடம்பெற்றிருக்கும். இதன்மூலம் மாணவர்கள் தங்களின் சுற்றுப்புறங்களையும், இயற்கையின் பயனையும் அறிந்து கொள்ளலாம். இந்த துணை பாடங்களை நடத்த ஒவ்வொரு பிரிவிலும் வாரத்திற்கு இரு வகுப்புகள் ஒதுக்கப்படும்.மேலும் 10 ம் வகுப்பு, பிளஸ் 2 அரசு தேர்வுகளை தவிர காலாண்டு, அரையாண்டு, மற்ற வகுப்பு ஆண்டு தேர்வுகளில் துணை பாடங்களுக்கு தனித் தேர்வு நடத்தப்படும். துணை பாடங்களுக்கு 4 ஆண்டுகளுக்கு மேலாக புத்தகங்கள் வழங்கவில்லை.ஆனால் வகுப்புகள் மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளன. பாடப்புத்தகங்கள் இல்லாததால் அந்த வகுப்புகளிலும் முதன்மை பாடங்களே நடத்தப்படுகின்றன. அதேபோல் உடற்கல்விக்கும் பாடங்கள் நடத்துவதில்லை; அவ்வப்போது விளையாடுவதற்கு மட்டும் அனுமதிக்கப்படுவர். அதிலும் 10 ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு அனுமதியில்லை.சிறப்பு ஆசிரியர்கள் கூறியதாவது: அரசே பாடப்புத்தகம் வழங்காதபோது எப்படி பாடம் நடத்த முடியும். மேலும் மாணவர்களுக்கு யோகா, நீதிபோதனை,கவுன்சிலிங் வேண்டும் என, கல்வியாளர்கள் வலியுறுத்துகின்றனர்.ஏற்கனவே உள்ள துணை பாடங்களே முறையாக நடப்பதில்லை என்பது அவர்களுக்கு தெரிவதில்லை. மதிப்பெண் அடிப்படையில் கல்விமுறை மாறிவிட்டது. இதனால் மற்ற பாடங்களை போதிப்பது என்பது கானல்நீராகி வருகிறது, என்றனர்.

No comments:

Post a Comment