SCROL

Sunday, October 2, 2016

பல லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய ராட்சத உயிரினம்!

பல லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய ராட்சத உயிரினம்!

ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் இயற்கைப் பேரழிவுகளால் மறைந்துபோன பல்வேறு உயிரினங்களின் படிமங்கள் அவ்வப்போது ஆங்காங்கே கண்டெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், சுமார் 170 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய ஜுராசிக் காலம் எனப்படும் டைனோசர் காலத்தில் வாழ்ந்ததாகக் கருதப்படும் கடல்வாழ் உயிரினம் ஒன்றைப் பற்றிய புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன் படிமங்கள் கடந்த கால் நூற்றாண்டு காலமாக அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்தபோதிலும் இந்த உயிரினம் தொடர்பான எவ்வித ஆராய்ச்சியும் செய்யப்படவில்லை.

தற்போது இதுதொடர்பான ஆராய்ச்சிகள் ஸ்காட்லாந்து விஞ்ஞானிகளால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவர்கள் தங்களுக்குக் கிடைத்த ஆதாரங்களின்படி, குறிப்பிட்ட உயிரினமானது 4 மீட்டர்கள் நீளமுடையது என்றும், கூர்மையான வாய்ப் பகுதியைக் கொண்டிருந்தது என்றும் கூறியுள்ளனர்.

டைனோசர்கள் இப்பூமியில் இருந்து அழிவதற்கு முன்பே இந்த ராட்சத உயிரினம் முற்றிலுமாக அழிந்துவிட்டதாக அவர்கள் கூடுதல் தகவலைத் தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment