SCROL

Sunday, October 9, 2016

உலகைச்சுற்றி...

உலகைச்சுற்றி...

* துருக்கி நாட்டில் ராணுவ புரட்சிக்கு முயற்சித்த பிரச்சினையில், போலீஸ் துறை உயர் அதிகாரிகள் உள்பட 166 பேரை கைது செய்வதற்கு அரசு பிடிவாரண்டு பிறப்பித்துள்ளது.

* பாகிஸ்தானை பயங்கரவாத நாடாக அறிவிப்பதற்கு தனது ஆதரவு இல்லை என்று அமெரிக்கா அறிவித்துள்ளது. அதே நேரத்தில், இந்தியாவுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகிற பயங்கரவாதிகளின் முகாம்களை ஒழிப்பதில், பிராந்தியத்தில் உள்ள அரசுகளுடன் தொடர்ந்து பணியாற்றுவோம் என கூறி உள்ளது.

*மொரிஷியஸ் நாட்டில் இந்திய பெருங்கடலில் கண்டெடுக்கப்பட்டுள்ள விமானத்தின் சிறகு, 2014-ம் ஆண்டு மார்ச் மாதம் 8-ந் தேதி கோலாலம்பூரில் இருந்து பீஜிங் சென்று கொண்டிருந்தபோது நடுவானில் மாயமான மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் எம்.எச். 370-க்கு உரியது என உறுதி செய்யப்பட்டுள்ளது.

* துருக்கியில் இஸ்தான்புல் போலீஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் நடந்த மோட்டார் சைக்கிள் குண்டுவெடிப்பில் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படுகிற குர்து இன போராளி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment