என்ஜினீயர்களுக்கு வேலை

என்ஜினீயர்களுக்கு வேலை

இந்தியன் ஆயில் நிறுவனத்தின் மதுரா சுத்திகரிப்பு ஆலையில் ஜூனியர் என்ஜினீயரிங் அசிஸ்டன்ட் பணிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 100 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். புரொடக்சன் பிரிவில் 34 பேரும், பவர் அண்ட் யூடிலிட்டி பிரிவில் 10 பேரும், எலக்ட்ரிக்கல் பிரிவில் 22 பேரும், மெக்கானிக்கல் பிரிவில் 17 பேரும், இன்ஸ்ட்ருமென்டேசன் பிரிவில் 11 பேரும், பயர் அண்ட் சேப்டி பிரிவில் 6 பேரும் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

 

விண்ணப்பதாரர்கள் 30-9-2016-ந் தேதியில் 18 முதல் 26 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் .பி.சி. பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு அனுமதிக்கப்படுகிறது.

 

கெமிக்கல், ரீபைனரி, பெட்ரோகெமிக்கல், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், இன்ஸ்ட்ருமென்டேசன், இன்ஸ்ட்ருமென்டேசன் அண்ட் கண்ட்ரோல் போன்ற என்ஜினீயரிங் பிரிவில் டிப்ளமோ படித்தவர்கள், பி.எஸ்.சி. கணிதம், இயற்பியல், வேதியியல், இண்டஸ்ட்ரியல் கெமிஸ்ட்ரி போன்ற பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு பணிகள் உள்ளன.

 

எழுத்து தேர்வு, திறமைத் தேர்வு,, உடல் அளவுத் தேர்வு, மருத்துவ பரிசோதனை, நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விருப்பம் உள்ளவர்கள் ரூ.150 கட்டணம் செலுத்தி, இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 22-10-2016-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.iocl.com என்ற இணையதளத்தை பார்க்கலாம்.

No comments:

Post a Comment