உலகைச் சுற்றி

உலகைச் சுற்றி

* பிலிப்பைன்ஸ் நாட்டில் ஐ.எஸ். அமைப்புடன் தொடர்புடைய அபு சயாப் பயங்கரவாதிகள், இந்தோனேசியாவை சேர்ந்த சிலரை பணய கைதிகளாக பிடித்து வைத்திருந்தனர். அவர்களில் 3 பேரை நேற்று விடுவித்து விட்டனர். இதன்மூலம் விடுவிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.

* அமெரிக்காவில் தெற்கு கரோலினா மாகாணத்தில் உள்ள ஆன்டர்சன் நகரில் சமீபத்தில் 14 வயது சிறுவன் ஒருவன் தனது தந்தையை சுட்டுக்கொன்றான். அத்துடன் அருகில் உள்ள பள்ளிக்கூடத்துக்கு சென்று, அங்கிருந்தவர்கள் மீது துப்பாக்கியால் சுட்டான். அதில் 2 குழந்தைகளும், ஒரு ஆசிரியரும் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்களில் 6 வயது சிறுவனான ஜேக்கப் ஹால், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.

* 2014-ம் ஆண்டு, உக்ரைனில் மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் எம்.எச்.17 சுட்டு வீழ்த்தப்பட்டதற்கு காரணமானவர்கள், இந்த ஆண்டின் இறுதியில் உறுதி செய்யப்பட்டு விடுவார்கள் என ஆஸ்திரேலிய வெளியுறவு மந்திரி ஜூலி பிஷப் கூறி உள்ளார்.

* கொலம்பியா நாட்டில் 52 ஆண்டுகளாக நடந்து வந்த உள்நாட்டு சண்டையை முடிவுக்கு கொண்டு வர அரசாங்கத்துக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த வாரம் உடன்பாடு ஏற்பட்டது. இந்த உடன்பாட்டை ஏற்பதா அல்லது நிராகரிப்பதா என்பது தொடர்பாக நேற்று அங்கு கருத்தறியும் வாக்கெடுப்பு நடத்தப் பட்டது.

No comments:

Post a Comment