மனித விசையின் வீரியம்!

மனித விசையின் வீரியம்!

மனித ஆற்றல் மூலம் இயங்கும் வாகனங்களுக்கான, 'உலக மனித ஆற்றல் வேக போட்டி' சமீபத்தில் அமெரிக்காவிலுள்ள நெவாடா பாலைவனத்தில் நடந்து முடிந்தது. அதில் 'ஏரோவெலோ' நிறுவனம் உருவாக்கிய, 'ஈட்டா' என்ற வாகனம் முதலாவதாக வந்து உலக சாதனை படைத்திருக்கிறது. ஈட்டா வாகனம் பார்ப்பதற்கு தோட்டா போல இருக்கிறது. அதனுள் படுத்தபடி, பெடலை மிதித்து ஓட்டிய டோட் ரெய்செர்ட், மணிக்கு, 144.19 கி.மீ., வேகத்தில் பயணித்து சாதனை புரிந்திருக்கிறார். கடந்த சில வருடங்களாகவே போட்டியில் கலந்துகொள்ளும் ஏரோவெலோ, இந்த வருடம், வடிவம் முதல், உள்ளே இருக்கும் தொழில்நுட்பம் வரை பலவற்றில் புதுமைகளை செய்திருக்கிறது. பார்ப்பதற்கு வினோத வடிவ கார் போல தோன்றினாலும், ஈட்டோ ஒரு இரு சக்கர சைக்கிள் தான். அதன் பாகங்கள் அனைத்துமே மிக எடை குறைவான உலோகங்களால் ஆனவை. இரண்டு சக்கர டயர்களும் சில மில்லி மீட்டர் தடிமனே உள்ளவை. வாகனத்தின் வெளிப்புற தோட்டா வடிவம், எதிர்க் காற்றை எளிதில் கிழித்துச் செல்லும் நோக்கத்தில் வடிவமைக்கப்பட்டது. வெறும் மனித ஆற்றல் மூலமே உலக வேக சாதனையை முறியடிக்க டோட் பயன்படுத்திய சக்தி, மூன்று மின் விளக்குகளை எரிக்க தேவைப்படும் மின்சாரத்திற்கு சமம் என்று ஏரோவெலோ தெரிவித்திருக்கிறது.

Comments