உலகைச்சுற்றி

உலகைச்சுற்றி

* ஜப்பான் நாட்டின் அசோ மலையில் நேற்று அதிகாலை எரிமலை வெடித்துச்சிதறியது. இதனால் 7 மைல் தூரம் புகை மண்டலமாக காட்சியளித்தது. எனினும் இதனால் யாருக்கும் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை.

* அமெரிக்காவின் குடியரசு கட்சிக்கு எதிராக சைபர் தாக்குதலை ரஷியா நடத்தி வருவதாக அமெரிக்க அரசு நேரடியாக குற்றம் சாட்டியுள்ளது.

* அமைதிக்கான நோபல் பரிசு கொலம்பிய ஜனாதிபதி ஜான் மானுவேல் சான்டோசுக்கு இந்த ஆண்டு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதே நாளில் அண்டை நாடான வெனிசுலா தங்கள் நாட்டின் மூத்த அரசியல் தலைவர் ஹியுகோ சாவேஸ் பெயரில் அமைதிக்கான விருதை அறிவித்து அதனை ரஷிய அதிபர் புதினுக்கு வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளது.

* ஆப்பிரிக்க நாடான நைஜரில் உள்ள சாகெல் பகுதியில் பயங்கரவாதிகள் தாக்குதலுக்கு எதிராக பயிற்சி அளிக்க பிரான்ஸ் அரசு ரூ.313 கோடி நிதி ஒதுக்க முடிவு செய்துள்ளது.

No comments:

Post a Comment