முதுநிலை பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வை நடத்த வேண்டும் ராமதாஸ் வலியுறுத்தல்

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வை நடத்த வேண்டும் ராமதாஸ் வலியுறுத்தல்

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வை உடனடியாக நடத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத் தியுள்ளார். இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியி ருப்பதாவது: தமிழகத்தில் ஆசிரியர்கள் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பின் அடிப்படையில்தான் நிய மிக்கப்பட்டு வந்தனர். முந்தைய அதிமுக ஆட்சியில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் போட்டித் தேர்வின் மூலமும், பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித் தேர்வு மற்றும் போட்டித் தேர்வின் மூலமும் நியமிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது. அதே நடைமுறைதான் இப்போதும் தொடர்கிறது. ஆனால், ஆசிரியர்கள் நிய மனத்தின் அளவு பெருமளவில் குறைந்து விட்டதால், ஆசிரியர் பணிக்கான கல்வியியல் பட்டம் (பி.எட்) பெற்றவர்கள் வேலை கிடைக்காமல் அவதிப்பட்டு வரு கின்றனர். பட்டதாரி ஆசிரியர் படிப்பு முடித்தவர்களில் 3.82 லட்சம் பேரும், முதுநிலை பட்ட தாரி ஆசிரியர் படிப்பு முடித்த வர்களில் 2.69 லட்சம் பேரும் அரசு வேலைவாய்ப்பு அலுவலகங்க ளில் பதிவு செய்து வைத்துவிட்டு பல ஆண்டுகளாகியும் வேலை யின்றி வாடுகின்றனர். தமிழக அரசுப் பள்ளிகளுக்கு முதுநிலை ஆசிரியர்கள் கடந்த இரு ஆண்டுகளாக நியமிக்கப் படவில்லை. பல பள்ளிகளில் 12-ம் வகுப்புக்கு பாடம் நடத்த ஆசிரியர்கள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. மேல்நிலைப் பள்ளிகளுக்குப் பொதுத்தேர்வு நெருங்குகிறது. அதனால், உடன டியாக போட்டித் தேர்வை நடத்தி முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களையும், ஏற்கெனவே நடத்தப்பட்ட போட்டித் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பள்ளி ஆய்வக உதவியாளர்களையும் நியமிக்க வேண்டும். உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை முடிவுக்குக் கொண்டு வந்து, பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வையும் தமிழக அரசு நடத்த வேண்டும்.

இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.  

Comments