பச்சிளம் குழந்தைகளை பாதுகாப்போம்

பச்சிளம் குழந்தைகளை பாதுகாப்போம்

சென்னை சூரியா மருத்துவமனையில் 30 படுக்கைகள் கொண்ட அதிநவீன பச்சிளங்குழந்தை தீவிர சிகிச்சை பிரிவு (என்.ஐ.சி.யு) அமைந்துள்ளது. இந்த சிகிச்சை பிரிவில் குறைமாதத்தில் பிறக்கும் குழந்தைகள் அதாவது முன்கூட்டி பிறந்த குழந்தைகளுக்கு உலகத்தரம் வாய்ந்த சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுவரை இந்த சிகிச்சை பிரிவில் முன்கூட்டியே பிறந்த 10,000-க்கும் மேற்பட்ட குழந்தைகள் சிகிச்சை பெற்றுள்ளனர். தீவிர சிகிச்சை பெற்ற குழந்தைகளில் 98 சதவீதம் பேர் நலமோடு உள்ளனர்.495 கிராம் (அரைகிலோவை விட குறைந்த எடை) எடை கொண்ட குழந்தைகளும் 24 வாரங்களில் பிறந்த குழந்தைகளும்கூட, காப்பாற்றப்பட்டு நல்ல உடல்நலத்தோடு உள்ளனர்.

பச்சிளம் குழந்தைகளுக்கான சிறப்பு ஆம்புலன்ஸ், மொபைல் என்.ஐ.சி.யு என்று அழைக்கப்படுகிறது. இந்த என்.ஐ.யு.சி வாகனத்தில், இன்குபேட்டர் (குழந்தையை கதகதப்பாக வைக்கும் கண்ணாடிப்பெட்டி), வென்டிலேட்டர் (செயற்கை சுவாச வசதி), இ.சி.ஜி மானிட்டர் (இதயத்துடிப்பை கண்காணிக்கும் கருவி) ஆகியவற்றோடு அனைத்து உயிர் காக்கும் மருந்துகளும் எப்போதும் தயார் நிலையில் இருக்கும். என்.ஐ.யு.சி வாகனத்தில் குழந்தை நல மருத்துவர், செவிலியர் ஆகியோர் உடன் செல்வார்கள். பச்சிளம் குழந்தைகளுக்கான இந்த சிறப்பு ஆம்புலன்ஸ், சென்னையிலிருந்து மட்டுமின்றி தமிழ்நாடு, ஆந்திர மாநிலத்தின் அமைந்துள்ள 200 மருத்துவமனைகளில் இருந்தும் குழந்தைகளை சூரியா என்.ஐ.சி.யு-வுக்கு பாதுகாப்பாக அழைத்து வருகிறது.

இந்த மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் மிகக்குறைந்த எடையுடன், மிகவும் முன்பாகவே பிறக்கும் 'பிரிமெச்சூர்' குழந்தைகளின் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து கருவிகளும் உள்ளன. இந்தியாவில் மிகச்சில மருத்துவமனைகளில் மட்டுமே இருக்கும் நைட்ரிக் ஆக்ஸைடு கேஸ் (நுரையீரல் பிரச்சினைகளுக்கு சிறப்பு சிகிச்சை) மற்றும் அதிநவீன 'ஹை-பிரிக்வன்சி வென்டிலேட்டர்' (நுணுக்கமான செய்கை சுவாசம் தரும் மெஷின்) ஆகியவை இங்கு உள்ளன. எனவே மிகவும் மோசமான நிலையில் பிறக்கும் குழந்தைகளைக் கூட காப்பாற்றும் வாய்ப்பு உள்ளது.

கிருமிகள் தாக்குதல்தான் கே.யு. நோயாளிகள் இறப்பதற்கு முக்கிய காரணம். கிருமிகள் தாக்குதல் ஏற்படாமல் இருந்தால், பச்சிளங்குழந்தைகள் இறக்கும் சதவீதம் மிகவும் குறையும் என்று உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. இதற்கு ஏற்றாற்போல், சூரியா மருத்துவமனையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

மிக நவீன சிகிச்சைகள் எப்போதும் முன்னேறிக்கொண்டே இருக்கவேண்டும் என்பதற்காகவும், பச்சிளங்குழந்தை சிகிச்சையில் பயிற்சி அளிப்பதற்காகவும் 'போஸ்ட்-டாக்டோரல் பெல்லோஷிப் இன் நியோநேட்டல் இன்டென்சிவ் கேர்' என்ற மேற்படிப்பு இங்கு வழங்கப்படுகிறது. இங்கு சிகிச்சை பெற்ற குழந்தைகள் பற்றிய விவரங்களும், சிகிச்சைமுறைகளும் பல சர்வதேச கருத்தரங்குகளில் பேசப்பட்டு சிறந்த வரவேற்பைப் பெற்றுள்ளன.

Comments