குரங்குகளுக்கு மாரடைப்பு நோய் வருமா?

குரங்குகளுக்கு மாரடைப்பு நோய் வருமா?

சென்னைக்கு அருகிலுள்ள வண்டலூர் அரசு வனவிலங்குப் பூங்காவில் மனிதக் குரங்கு ஒன்று மாரடைப்பால் காலமானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.மனிதர்களைப் போலவே சில நோய்கள் விலங்கினங்களைத் தாக்கும் என்றாலும், விலங்குகளுக்கு மாரடைப்பு ஏற்படும் என்று நேரடியாகக் கூற முடியாது என தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் டாக்டர் சு திலகர் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.எனினும் பல விலங்கினங்கள் இதயம் தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டு அதன் மூலம் உயிரிழப்புகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிமாக உள்ளன என்றும் அவர் கூறுகிறார்.மனிதர்களுக்கு உள்ளது போலவே விலங்கினங்களும் பல வகையான புற்றுநோயால் பாதிக்கப்படலாம் எனவும் டாக்டர் திலகர் தெரிவித்தார்.அதேவேளை ரத்தக்கொதிப்பு மற்றும் நீரிழிவு போன்ற நோய்கள் குறைந்த அளவிலேயே விலங்கினங்களைத் தாக்கும் வாய்ப்புகள் உள்ளன எனவும் அவர் கூறுகிறார்.

No comments:

Post a Comment