SCROL

Sunday, October 9, 2016

காய்ச்சல், ஆஸ்துமாவுக்கு மருந்தாகும் மர மல்லிகை

காய்ச்சல், ஆஸ்துமாவுக்கு மருந்தாகும் மர மல்லிகை

நலம் தரும் நாட்டு மருத்துவம் நிகழ்ச்சியில் இன்றைக்கு நாம் மர மல்லிகையின் மருத்துவ குணங்களை பற்றி பார்க்கலாம். மலர்களிலே உயர்வான மலராக மல்லிகை பூ கருதப்படுகிறது. ஜாதி மல்லி, காட்டு மல்லி, பவள மல்லி போன்ற பல்வேறு வகையான மல்லிகை பூக்களில் ஒன்றாக இந்த மர மல்லிகையும் விளங்குகிறது. உயர்ந்த மரமாக வளரும் இதை அழகுக்காகவும், வாசனைக்காகவும் பல்வேறு இடங்களிலும் வளர்ப்பதை இயல்பாக காண முடியும். மில்லிடோனியா ஹார்டன்சிஸ் என்ற தாவர பெயரை கொண்டுள்ளது. ட்ரீ ஜாஸ்மின் என ஆங்கிலத்தில் குறிப்பிடப்படுகிறது. இதை காட்டு மல்லி என்றும் அழைப்பார்கள். பொதுவாக பள்ளி மைதானங்கள், சாலை யோரங்கள், பூங்காக்கள் என பரவலாக மர மல்லிகை மரங்களை பார்க்கலாம். மனதை சுண்டி இழுக்கும் வாசனை பூக்களை பூக்கும். இந்த பூக்கள் நீண்ட காம்புகளை உடையதாக விளங்குகிறது.மல்லிகை, ரோஜா, சாமந்தி போன்ற பூக்களின் வாசனையே நமக்கு மிக சிறந்த மருந்தாக அமைகிறது. எனவே அவற்றை நமது வீடுகளில் வளர்க்கும் பழக்கத்தை முன்னோர்கள் வைத்திருந்தனர். மர மல்லிகையின் பூக்கள், இலைகள், மர பட்டைகள் அனைத்தும் மருந்தாக விளங்குகிறது. பூஞ்சை காளான் தாக்குதலுக்கு ஒரு மிக சிறந்த மேற்பூச்சு மருந்தாக மர மல்லிகை விளங்குகிறது. காய்ச்சலை போக்கக் கூடிய மருந்தாகவும் மர மல்லிகை விளங்குகிறது. மர மல்லிகை பூக்களை பயன்படுத்தி சளி, இருமல், காய்ச்சலை போக்கக் கூடிய ஒரு தேநீரை தயார் செய்யலாம். இதற்கு தேவையான பொருட்கள். மர மல்லிகை பூக்கள், மிளகு பொடி, தேன். 10 மர மல்லிகை பூக்கள் எடுத்து கொள்ள வேண்டும். இதனுடன் அரை ஸ்பூன் மிளகு பொடி சேர்க்க வேண்டும். பின்னர் தேவையான அளவு நீர் விட்டு கொதிக்க விட வேண்டும். இதை வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். இதனுடன் சிறிது தேன் சேர்த்து பருகி வர வேண்டும். இது காய்ச்சல், ஆஸ்துமா மூச்சு திணறல் போன்றவற்றிற்கு சிறந்த மருந்தாக அமைகிறது. மேலும் இந்த பூக்களை காய வைத்து சாம்பிராணி போல புகையாக பிடித்து வந்தால் மூச்சு திணறல் படிப்படியாக குறையும். அதே போல் மூக்கடைப்பு இருக்கும் சமயத்தில் வெந்நீரில் ஆவி பிடித்தால் மூக்கடைப்பு, தலைபாரம் போன்றவை விலகும். நீர்கோர்வையும் குறையும்.இந்த தேநீர் வாயில் இருக்கும் பூஞ்சைகளை அகற்றக் கூடியதாக உள்ளது.இவற்றின் இலைகள், பூக்களை தேநீராக தயாரித்து சாப்பிடுவதால் வயிற்றில் ஏற்படும் அல்சர், பூஞ்சைகள் இவற்றிற்கு ஒரு சிறந்த மருந்தாக அமைகிறது. நுண் கிருமிகளின் தாக்குதலை போக்கக் கூடியதாக அமைகிறது. ஆன்டி பயாட்டிக்காகவும் இது பயன்தரக் கூடியது. பித்த சமனியாகவும் இது வேலை செய்கிறது. மேலும் மர மல்லிகை இலைகளை பயன்படுத்தி காய்ச்சலை குணப்படுத்தும் மருந்தை தயார் செய்யலாம். இதற்கு தேவையான பொருட்கள் மர மல்லிகை இலைகள், சீரக பொடி, பனங்கற்கண்டு. மர மல்லிகை இலைகள் 5 அல்லது 6 எடுத்துக் கொள்ள வேண்டும். அரை ஸ்பூன் அளவு சீரக பொடியை சேர்க்க வேண்டும். அரை ஸ்பூன் பனங்கற்கண்டு சேர்க்க வேண்டும். ஒரு டம்ளர் நீர் விட்டு கஷாயத்தை தயார் செய்து கொள்ள வேண்டும்.  இதை பருகுவதால் காய்ச்சல் தணிகிறது. தலைவலி குறைகிறது. உடலில் வலி இருந்தால் அதை போக்கி ஊக்கத்தை அளிக்கிறது. இது வலியை போக்கும் குணம் கொண்டதாக விளங்குவதால் உடல், மூட்டு வலிகளை போக்கக் கூடியதாக உள்ளது

No comments:

Post a Comment