உலகைச் சுற்றி

உலகைச் சுற்றி

* சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் வசமுள்ள அலெப்போ நகரப்பகுதிகளில், பாதிப்பகுதியை அரசு படைகள் கைப்பற்றி விட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. இதற்கிடையே அந்த நகரில் உள்ள மக்கள் அனைவரும், நகரைவிட்டு வெளியேறிவிட வேண்டும் என சிரியா அரசு எச்சரித்துள்ளது.

* கொலம்பியா நாட்டில் 52 ஆண்டு கால உள்நாட்டுப்போரை முடிவுக்கு கொண்டு வர அரசு, கிளர்ச்சியாளர்கள் இடையே உடன்பாடு ஏற்பட்டது. ஆனால் இது தொடர்பான கருத்தறியும் வாக்கெடுப்பில், மக்கள் இந்த உடன்பாட்டை நிராகரித்து உள்ளனர். இதன் காரணமாக புதிய அமைதி உடன்பாடு ஏற்படுத்த கொலம்பியா அரசும், கிளர்ச்சியாளர்களும் உறுதி பூண்டுள்ளனர் என அமெரிக்க வெளியுறவுத்துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறினார்.

* தென்கொரியாவை சாபா புயல் கடுமையாக தாக்கியது. இது தொடர்பான சம்பவங்களில் 7 பேர் உயிரிழந்தனர்.

* போலந்து நாட்டில் கரு கலைப்புக்கு ஒட்டுமொத்த தடை விதிக்கும் மசோதாவை பாராளுமன்றம் நிராகரித்து விட்டது.

No comments:

Post a Comment