ஆராய்ச்சி மையத்தில் பயிற்சிப் பணி

ஆராய்ச்சி மையத்தில் பயிற்சிப் பணி

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் ஒரு அங்கமாக செயல்படுகிறது விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மையம். திருவனந்தபுரத்தில் செயல்படும் இந்த ஆராய்ச்சி மையத்தில் தற்போது பட்டதாரி பயிற்சிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 109 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.ஏரோநாட்டிக்கல், கெமிக்கல், சிவில், கம்ப்யூட்டர் சயின்ஸ், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல், மெட்டலர்ஜி, புரொடக்சன், லைபிரரி அண்ட் இன்பர்மேசன் சயின்ஸ் போன்ற பிரிவுகளில் பயிற்சிப்பணிகள் உள்ளன. இவை தொடர்பான என்ஜினீயரிங், டெக்னாலஜி பட்டப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இவர்கள் குறைந்தபட்சம் 65 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வுசெய்யப்படுவார்கள். விருப்பம் உள்ளவர்கள் தேவையான சான்றுகளுடன் இதற்கான நேரடி நேர்காணலில் பங்கேற்கலாம். முன்னதாக www.sdcentre.org என்ற இணையதள பக்கத்திற்கு சென்று விவரங்களை பதிவு செய்ய வேண்டும். குறிப்பிட்ட சில பணிகளுக்கு 22-10-2016 அன்று நேர்காணல் நடந்தது. இன்னும் சில பணிகளுக்கு 5-11-2016 நேர்காணல் நடக்கிறது.நேர்காணல் நடைபெறும் இடம் மற்றும் கொண்டு செல்ல வேண்டிய ஆவணங்கள் உள்ளிட்ட முழுமையான விவரங்களை www.vssc.gov.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

 

No comments:

Post a Comment