உலகைச் சுற்றி...

உலகைச் சுற்றி...

* துருக்கியில் புரட்சி முயற்சிக்கு காரணமானவர் என கூறப்படுகிற அமெரிக்க வாழ் மத குரு பெதுல்லா குலன் ஆதரவாளர்கள் என்று சொல்லப்படுகிற 12 ஆயிரம் போலீஸ் அதிகாரிகள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

* எகிப்தில் சகோதரத்துவ கட்சியின் மூத்த தலைவர் முகமது கமால், மற்றொரு தலைவரான யாசர் ஷெகதா ஆகிய இருவரும் சுட்டுக்கொல்லப்பட்டு விட்டனர், அதற்கு நாங்கள்தான் பொறுப்பு என அந்த நாட்டின் உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

* ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா, பாகிஸ்தான் இடையே அதிகரித்துவரும் பதற்றம் குறித்து விவாதிக்க வில்லை என ஐ.நா. சபைக்கான ரஷிய தூதர் விடாலி சுர்கின் கூறி உள்ளார்.

* அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிடும் டொனால்டு டிரம்ப் 1995-ம் ஆண்டு, தொழிலில் தனக்கு 916 மில்லியன் டாலர் அளவுக்கு (சுமார் ரூ.6,100 கோடி) நஷ்டம் ஏற்பட்டதாக 1995-ம் ஆண்டு கணக்கு காட்டியுள்ளார். இதன்மூலம் அவர் 18 ஆண்டுகள் வரி செலுத்தாமல், சட்டப்பூர்வமாக தப்பி இருக்க முடியும் என 'நியூயார்க் டைம்ஸ் ஏடு' செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால் டிரம்ப், தான் பலன் அடைகிற வகையில் அமெரிக்க வருமானவரி சட்டங்களை புத்திசாலித்தனமாக பயன்படுத்தி உள்ளதாக பெருமிதத்துடன் கூறி உள்ளார்

No comments:

Post a Comment