சமூக வலைதளமான ட்விட்டரில் புது ஆப்ஷன்

சமூக வலைதளமான ட்விட்டரில் புது ஆப்ஷன்

புதுடெல்லி: பிரபல சமூக வலைதளமான ட்விட்டரின் சிறப்பம்சங்களை பயனாளிகள் உபயோகப்படுத்தும்போது, சில சமயங்களில் வெறுப்பேற்றும் அம்சம், ஒரு ட்வீட்டில் அதிகபட்சம் 140 எழுத்துக்கள் மட்டுமே (வார்த்தை இடைவெளி உட்பட) ட்விட்டரின் விதி. இதில் ட்வீட்டில் வீடியோ, புகைப்படங்கள் போன்றவை இணையும்போது 140 கேரக்டருக்கு மேல் இருந்தால், அவை கணக்கிடப்பட்டு வார்த்தைகளின் எண்ணிக்கை குறையும். இதனால் ஒரு ட்வீட்டில் முடிய வேண்டிய தகவல் 2-3 என நீளும். இவற்றை தவிர்க்க, தற்போது ஒரு ட்வீட்டுக்கான பதிலில் (ரிப்ளை) @**** என சம்பந்தப்பட்டவரின் பெயரைக் குறிப்பிடும்போதும், புகைப்படங்கள், வீடியோக்கள், ஜிப் ஆகியவற்றை இணைக்கும்போது, அவை 140 கேரக்டரில் கணக்கெடுத்துக் கொள்ளப்படமாட்டாது.பயனாளிகளின் சொந்த ட்வீட்டுகளில் ரீ-ட்வீட் அம்சம் அறிமுகப்படுத்தப்படும். இதனால் அதிக கவனம் பெறாத அல்லது சூழலுக்கு தகுந்த பழைய ட்வீட்டுகளை மீண்டும் ட்வீட் செய்யும் வசதியைப் பெறலாம். இதன்மூலம் ட்விட்டரின் பயன்பாடு இன்னும் அதிகரிக்கும் என அந்நிறுவனம் உறுதி கூறுகிறது.A

No comments:

Post a Comment