தேர்தல் குறித்த புகார்களை தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண் மாவட்ட தேர்தல் அலுவலர் அறிவிப்பு

தேர்தல் குறித்த புகார்களை தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண் மாவட்ட தேர்தல் அலுவலர் அறிவிப்பு

சென்னை மாவட்ட தேர்தல் அலுவலரும், பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனருமான தா.கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-சாதாரண உள்ளாட்சித் தேர்தல்-2016-ஐ முன்னிட்டு, தேர்தல் குறித்த புகார்களை பெருநகர சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் செயல்பட்டு வரும் தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் தெரிவிக்கலாம்.கட்டுப்பாட்டு அறையில் புகார்களை பெறுவதற்காக 5 இணைப்புகள் கொண்ட கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 425 7012 அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தேர்தல் குறித்து ஏதேனும் புகார்களை தெரிவிக்க விரும்பினால் மேற்கண்ட எண்ணில் 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம்.பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் புகார்களை கணினியில் பதிவு செய்து சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு தெரிவித்து, உடனே மேல்நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment