நெரிசலில் அசம்பாவிதங்களை தடுக்கலாம்...

நெரிசலில் அசம்பாவிதங்களை தடுக்கலாம்...

நெரிசலில் நிகழும் அசம்பாவிதங்கள் பல. திருட்டு, சில்மிஷம், விபத்து, கொலை என பல்வேறு குற்றங்கள் நெரிசலில் நிகழ்வதுண்டு. ஒருவர் நகரும் திசை மற்றும் வேகத்தை அடிப்படையாக வைத்து கூட்டத்தில் என்ன நடக்கப்போகிறது என்பதை தீர்மானிக்கும் தொழில்நுட்பம் ஒன்றை ஜப்பானின் மிட்சுபிஷி எலக்ட்ரிக் நிறுவனம் உருவாக்கி உள்ளது. டோக்கியோ பல்கலைக்கழக ஆய்வாளர்கள் இதன் தயாரிப்பில் முக்கிய பங்கு வகித்துள்ளனர்.பொது இடங்கள், மால்கள் என மக்கள் அதிகமாக கூடும் இடங்களை கேமரா மற்றும் சென்சார் கருவிகளின் பார்வையில் கண்காணிக்கும் இந்த தொழில்நுட்பம். ஒருவரின் இயக்கத்தை அடிப்படையாக வைத்து அவர் அடுத்து என்ன செய்யப்போகிறார் என்பதை யூகிக்கிறது. இதன்படி ஒருவர் மீது மற்றவர் மோதும் வகையிலோ, தாக்கும் வகையிலோ வேகமாக நகர்வதை கணித்தால் உடனே கட்டுப்பாட்டு அறையில் உள்ள அதிகாரிகளுக்கு எச்சரிக்கை செய்வதுடன், சம்பந்தப்பட்ட இடத்தை தீவிரமாக கண்காணிக்கவும் தொடங்கிவிடும். அதிகாரிகளும் துரிதமாக செயல்பட்டு அசம்பாவிதத்தை கட்டுப்படுத்த முடியும்.டோக்கியோவில் நடந்த ஒரு விழாவில் இதை பரிசோதனை முயற்சி செய்து பார்த்தனர். 80 சதவீத அளவில் கருவி சிறப்பாக செயல்படுவது தெரியவந்துள்ளது. மேலும் சில முன்னேற்றங்களுடன், பல்வேறு பொது இடங்களில் இந்த கண்காணிப்பு கருவி பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Comments