SCROL

Monday, October 10, 2016

உலகின் மிகப்பெரிய டி.வி. ரிமோட்

உலகின் மிகப்பெரிய டி.வி. ரிமோட்

டி.வி. பயன்பாட்டுக்கு வந்த புதிதில், அதன் அளவு மிகப் பெரியதாகவும் அதில் படங்களை கருப்பு-வெள்ளையில் மட்டுமே பார்க்க முடிந்தது. ஆனால் நாளடைவில் அதன் வளர்ச்சி மிக அபரிமிதமாக இருந்தது.

இதன்காரணமாக அதன் அளவும், எடையும் கூடியும், குறைந்தும், தற்போது எச்.டி. (ஹை டெபினிஷன்) எனப்படும் தரத்தில் கண்ணைப்பறிக்கும் வண்ணங்களில் படம் பார்த்து கொண்டு இருக்கிறோம். அதுமட்டுமின்றி ஆரம்ப கால டி.வி.யை இயக்க, அதில் உள்ள பட்டன்களை தான் பயன்படுத்த முடியும். ஆனால் இப்போது உட்கார்ந்த இடத்தில் அமர்ந்து கொண்டே ரிமோட் மூலம் டி.வி.யை இயக்குகிறோம். இந்த ரிமோட் கண்ட்ரோல் கருவி கையடக்க அளவில் இருக்கும். அதிகபட்சமாக இதன் நீளம் அரை அடி தான் இருக்கும்.

ஆனால் சாதனை ஏதாவது நிகழ்த்த வேண்டும் என்ற எண்ணத்தில் நம் இந்திய சகோதரர்கள் இருவர் உலகின் மிக நீளமான ரிமோட் கருவியை தயாரித்து உலக சாதனை படைத்துள்ளனர். இதை நிகழ்த்தியவர்கள், நமது உத்தரபிரதேசத்தில் உள்ள ஜபல்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள். சூரஜ்குமார் மெகர், ராஜேஷ்குமார் மெகர் ஆகிய இந்த 2 சகோதரர்களும், 14 அடி நீளம் கொண்ட மிகப்பெரிய ரிமோட்டை தயாரித்துள்ளனர். இது வெறும் காட்சிப் பொருளாக மட்டுமின்றி, அனைத்து டி.வி.களிலும் பயன்படுத்தும் அளவுக்கு தயாரித்துள்ளனர்.

இந்த ரிமோட்டை தயாரிப்பதற்காக தங்களது மோட்டார் சைக்கிளை விற்று விட்டு, பலரிடம் கடன் பெற்றுள்ளனர். மொத்தம் 89 நாட்கள் உழைத்து இதை தயாரித்துள்ளனர். சகோதரர்களில் ஒருவரான ராஜேஷ்குமார் மெகர், டிப்ளமோ இன் எலக்ட்ரானிக்ஸ் என்ஜினீயரிங் படித்து இருக்கிறார். இவர்களின் சாதனைக்கு கின்னஸ் அங்கீகாரமும் கிடைத்து விட்டது.

No comments:

Post a Comment