தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளிலும் இலவச மதிய உணவு

தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளிலும் இலவச மதிய உணவு

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக் கும் மாணவர்களுக்கு இலவச மதிய உணவு அளிக்கப்படுகிறது. அதுபோல, தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கும் அரசின் இலவச மதிய உணவுத் திட்டத்தை செயல்படுத்த வேண் டும் என வாசகர் ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக, கோவிலம் பாக்கத்தைச் சேர்ந்த கம்பர்பிரான் என்ற வாசகர் 'தி இந்து' உங்கள் குரலில் கூறும்போது, ''அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி களில் இலவச மதிய உணவு வழங்கப்படுகிறது. தற்போது கலவை சாதம், முட்டை பொரி யல் உள்ளிட்டவை வழங்கப்படு கின்றன. அங்கன்வாடி குழந்தை களுக்கும் பல்வேறு சத்தான உணவுப் பொருட்கள் வழங்கப் பட்டு வருகின்றன. தற்போது தனியார் பள்ளிகளிலும் ஏழை மாணவர்கள் அதிக அளவில் படிக் கின்றனர். இந்த மாணவர்களின் வசதிக்காக, இலவச மதிய உணவு திட்டத்தை அரசு செயல்படுத்த வேண்டும். இதன்மூலம் அந்த மாணவர்களது பெற்றோரின் சுமையை குறைக்க முடியும்'' என்றார். இது தொடர்பாக சமூக நலத்துறை அலுவலர்கள் கூறும்போது, ''அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளைப் போல், தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கும் இலவச உணவு வழங்குவது குறித்து அரசுதான் முடிவு செய்ய வேண்டும்'' என்றனர். தனியார் பள்ளிகளிலும் ஏழை மாணவர்கள் அதிகளவில் படிக்கின்றனர். இந்த மாணவர்களின் வசதிக்காக, இலவச மதிய உணவு திட்டத்தை அரசு செயல்படுத்த வேண்டும். இதன் மூலம் அந்த மாணவர்களின் பெற்றோரின் சுமையை குறைக்க முடியும்

No comments:

Post a Comment