தலைநகரில் வகுப்பறை இல்லாத பள்ளிகள்!!

தலைநகரில் வகுப்பறை இல்லாத பள்ளிகள்!!

டெல்லியில், தற்போது நடைபெற்றுவரும் ஆம் ஆத்மி ஆட்சியில் பள்ளிகளில் சரியான உள்கட்டமைப்பு மற்றும் தேவையான ஆசிரியர்கள் இல்லாதது குறித்து விளக்கம் அளிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.இதுகுறித்து நீதிபதி சஞ்சீவ் சச்தேவா, டெல்லி அரசாங்கம் தலைநகரில் உள்ள அரசுப் பள்ளிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் வழிமுறைகளை செய்து தரவில்லை என்பதால் நீதிமன்றம் டெல்லி அரசுக்கு, அரசுப் பள்ளிகளின் நிலைகுறித்து தகவலை தாக்கல் செய்யுமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அந்தத் தகவலில், தலைநகரில் மொத்தம் எத்தனை அரசுப் பள்ளிகள் உள்ளன. ஒவ்வொரு பள்ளிகளிலும் எத்தனை மாணவர்கள் கல்வி பயில்கின்றனர் மற்றும் உள்கட்டமைப்பு வசதி, மேஜை, நாற்காலி வசதி ஆகியவை எந்தெந்த பள்ளிகளில் இருக்கின்றன என்பது குறித்து அறிக்கை தாக்கல்செய்ய வேண்டும் என்று கூறியிருந்தது.இதற்கு அரசாங்கம் சார்பில் பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதி மற்றும் ஆசிரியர்களின் எண்ணிக்கை போன்றவை குறித்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. மேலும் பள்ளிகளில் இருக்கும் குறைபாடுகளைக் களைவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர். இதன்பின்னர், இந்த வழக்கு டிசம்பர் 15ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.பள்ளிகளில் நடத்தப்பட்ட ஆய்வுக்குப்பின், டெல்லியில் பல பள்ளிகளில் போதிய ஆசிரியர்கள் இல்லாமல்தான் நடத்தப்பட்டு வருகின்றன என்ற உண்மை தெரியவந்துள்ளது. உள்கட்டமைப்பு வசதிகளும் போதிய ஆசிரியர்களும் இல்லாத காரணத்தால், பள்ளி ஷிப்ட் முறையில் இயங்குகிறது. ஒன்பதாம் வகுப்பு முதல் பனிரெண்டு வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு காலை 7 மணி முதல் 12.30 மணி வரை வகுப்புகள் நடத்தப்படுகிறது. ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை மதியம் 1.30 மணி முதல் 6.30 வரை நடத்தப்படுகிறது. இந்த குறைகளைக் களைய வேண்டும் என்று டெல்லி நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

No comments:

Post a Comment