சுகாதார சேவைக்கு பல கோடிகள்

சுகாதார சேவைக்கு பல கோடிகள்

வளரும் நாடுகளில் மருத்துவமும் சுகாதாரமும் சார்ந்த வசதிகள் எட்டாத மக்கள் பல கோடி பேர் உள்ளனர். இவர்களுக்கு உதவுவதற்காக துவங்கப்படும் தொழில்களுக்கு, முதலீடு தர ஜி.இ., ஹெல்த்கேர் திட்டமிட்டுள்ளது. இதற்கென 'பைவ்.எய்ட்' என்ற பிரிலை ஜி.இ., உருவாக்கி உள்ளது.பரிசீலனைக்குப் பிறகு தேர்ந்தெடுக்கப்படும், 10 புதிய தொழில்களுக்கு தலா ரூ.33.5 கோடி வரை முதலீடு கிடைக்கும். இத் தொழில்கள் உருவாக்கும் பொருள் அல்லது சேவைகளை உலகளவில் சந்தைப்படுத்தவும் ஜி.இ., உதவும். முதலாவதாக பெங்களூருவை சேர்ந்த 'ட்ரைகாக்' நிறுவனத்திற்கு முதலீடு கிடைத்துள்ளது. மாரடைப்பு அறிகுறி ஏற்பட்டதிலிருந்து சிகிச்சை பெறும்வரை உள்ள கால விரயத்தை குறைக்க உதவும் தொழில்நுட்பத்தை ட்ரைகாக் உருவாக்கியுள்ளது.மெத்த வளருது மேகக் கணினி! உலகெங்கும் பல நிறுவனங்கள், 'கிளவுட் கம்ப்யூடிங்' எனப்படும் 'மேகக் கணினி' முறையை நோக்கி நகர ஆரம்பித்துள்ளன. 2025 வாக்கில் வழக்கமான தகவல் தொழில்நுட்பங்களுக்கு செய்யப்படும் முதலீடு வெகுவாக குறைந்து, 80 சதவீத முதலீடுகள் மேகக் கணினி தொழில்நுட்பங்களுக்காகவே செய்யப்படும் என்று மென்பொருள் நிறுவனமான ஆரக்கிள் கணித்துள்ளது.

No comments:

Post a Comment