துளிகள்...

துளிகள்...

* உலக ஹெவி வெயிட் குத்துச்சண்டை சாம்பியன் டைசன் புரி (இங்கிலாந்து) குத்துச்சண்டை போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்துள்ளார். 28 வயதான டைசன் ஊக்க மருந்து பிரச்சினையால் ஓய்வு முடிவை எடுத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

* சீன ஓபன் டென்னிஸ் போட்டி பீஜிங்கில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் ரோகன் போபண்ணா (இந்தியா)-டேனியல் நெஸ்டர் (கனடா) ஜோடி 6-7, 4-6 என்ற நேர்செட்டில் ஸ்பெயின் இணையான ரபெல் நடால்-பாப்லோ புஸ்டாவிடம் தோல்வி கண்டு வெளியேறியது. மற்றொரு ஆட்டத்தில் லியாண்டர் பெயஸ் (இந்தியா)-ஆந்த்ரே பெக்மான் (ஜெர்மனி) இணை 6-3, 5-7, 7-10 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் பெர்னார்ட் டோமிச்-ஜாக் ஜோடியிடம் தோல்வி கண்டது.

* இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் 3-வது நாளில் டிரென்ட் பவுல்ட் பந்து வீச்சில் இடது கைவிரலில் காயம் அடைந்தார். இதில் அவருக்கு லேசான எலும்பு முறிவு ஏற்பட்டு இருப்பதால் அடுத்த டெஸ்ட் போட்டியில் விளையாடமாட்டார் என்று இந்திய அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

* டெஸ்ட் தர வரிசையில் நம்பர் ஒன் இடத்தை பிடித்த விராட்கோலி தலைமையிலான இந்திய அணிக்கு இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் அனுராக் தாகூர் மற்றும் நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Comments