ஜெ., உடல்நிலை : அப்பல்லோ அறிக்கை

ஜெ., உடல்நிலை : அப்பல்லோ அறிக்கை

'முதல்வர் ஜெயலலிதாவுக்கு, சீரானசுவாசத்திற்கும், நுரையீரல் பாதிப்பை நீக்கவும், தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது' என, அப்பல்லோ மருத்துவ மனை தெரிவித்துள்ளது. முதல்வர் ஜெயலலிதா, உடல்நலக் குறைவால், செப்., 22 முதல், சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வருகிறார்; 17 நாட்களாக சிகிச்சை தொடர்கிறது.மருத்துவமனை நிர்வாகம், நேற்று வெளியிட்டு உள்ள அறிக்கை: முதல்வர் ஜெயலலிதா, டாக்டர்களின் தொடர் கண்காணிப்பில் உள்ளார். அவருக்கு சீரான சுவாசம் தொடர்பாக, டாக்டர்கள் மிக கவனமாக கண்காணித்து வருகின்றனர். மேலும், நுரையீரல் தொற்று பாதிப்பை நீக்க, தொடர் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அத்துடன், ஊட்டச்சத்து, பிசியோதெரபி உள்ளிட்ட சிகிச்சைகளும் தரப்படுகின்றன. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment