உலகை சுற்றி

உலகை சுற்றி

* பாகிஸ்தானில் ஸ்வாட் பள்ளத்தாக்கு நகரமான மிங்காராவில் நேற்று மதியம் 1.34 மணிக்கு நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 5.4 புள்ளிகளாக பதிவான இந்த நில நடுக்கத்தால் சேதங்கள் எதுவும் உண்டா என்பது உடனடியாக தெரிய வரவில்லை.

* பிரான்ஸ், பெல்ஜியம் நாடுகளை தொடர்ந்து பல்கேரியாவில் பொது இடங்களில் பெண்கள் முகத்தினை மூடிக்கொள்கிற வகையில் முகத்திரைகளை அணிவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான சட்டத்துக்கு அந்த நாட்டின் பாராளுமன்றம் ஒப்புதல் வழங்கியது.

* அமெரிக்க நாட்டின் சுப்ரீம் கோர்ட்டு, ஓரின சேர்க்கையாளர்கள் திருமணத்துக்கு சட்ட அந்தஸ்து வழங்கி ஏற்கனவே தீர்ப்பு அளித்தது. ஆனால் அந்த தீர்ப்புக்கு அலபாமா மாகாண தலைமை நீதிபதி ராய் மூரே (வயது 69) கட்டுப்படவில்லை. ஓரின தம்பதியரின் திருமணத்தை அங்கீகரித்து சான்றளிக்க அவர் கீழ்நீதிபதிகளுக்கு தடை விதித்தார். இதையடுத்து அவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

* சர்வதேச பயங்கரவாதத்துக்கு மாலத்தீவு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சார்க் நாடுகள் அமைப்பின் 19-வது உச்சி மாநாட்டுக்கு உகந்த சூழ்நிலையை உருவாக்குமாறு உறுப்புநாடுகளை அந்த நாடு கேட்டுக்கொண்டுள்ளது.

Comments