செவிலிய பட்டயப் படிப்புக்கு நாளை கலந்தாய்வு.

செவிலிய பட்டயப் படிப்புக்கு நாளை கலந்தாய்வு.

 

செவிலிய பட்டயப் படிப்புக்கான கலந்தாய்வு செவ்வாய்க்கிழமை (அக். 18) தொடங்க உள்ளது.தமிழகத்தில் 23 அரசு செவிலிய பட்டயப் படிப்பு பள்ளிகளில் உள்ள 2 ஆயிரம் இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான முதல்கட்ட கலந்தாய்வு சென்னை ஓமந்தூரார் சிறப்பு பல்நோக்கு மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது. இதற்கான அட்டவணை   www.tnhealth.org  என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. கலந்தாய்வில் பங்கேற்பதற்கான அழைப்புக் கடிதம் தனித்தனியாக அனுப்பப்பட்டுள்ளது. கடிதம் கிடைக்கப் பெறாதவர்கள், தங்கள் தர வரிசையின் அடிப்படையில் கலந்தாய்வில் பங்கேற்கலாம் என்று மருத்துவக் கல்வி தேர்வுக் குழு அதிகாரிகள் தெரிவித்தனர். நாளை..: கலந்தாய்வில் விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள், மாற்றுத்திறனாளிகள் ஆகிய சிறப்புப் பிரிவினருக்கு செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது. இதில், தகுதியுள்ள முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள் 15 பேர், மாற்றுத்திறனாளிகள் 6 பேர் கொண்ட பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. காலை 10 மணிக்கு பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்கும்.

No comments:

Post a Comment