தோல் நோய்களை குணமாக்கும் பரங்கி பட்டை

தோல் நோய்களை குணமாக்கும் பரங்கி பட்டை

தோல்நோய்களை குணமாக்க கூடியதும், வாதத்தை போக்க வல்லதும், உடலுக்கு பலம் தரக்கூடியது பரங்கி பட்டை. பரங்கி பட்டை நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். உடல் தேற்றியாக விளங்கும் பரங்கி பட்டையில் வைட்டமின், மினரல் அதிகளவு உள்ளது. பால்வினை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் உடலை தேற்றக்கூடியது. மூட்டு வலி, வீக்கத்தை சரி செய்யும். உடலுக்கு பலம் தரும் டானிக்காகிறது.பரங்கி பட்டையை பயன்படுத்தி வாதத்துக்கான மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: பரங்கி பட்டை சூரணம், திரிகடுகு சூரணம், திரிபலா சூரணம், தேன், நெய், பனங்கற்கண்டு. அரை ஸ்பூன் பரங்கி பட்டை சூரணம், கால் ஸ்பூன் திரிகடுகு சூரணம், கால் ஸ்பூன் திரிபலா சூரணம், சிறிது பனங்கற்கண்டு, கால் ஸ்பூன் நெய் சேர்த்து நீர்விட்டு கொதிக்க வைக்கவும். பின்னர் வடிகட்டி தேன் சேர்த்து குடித்தால் முடக்குவாதம், கீழ்வாதத்தால் ஏற்படும் வலி, வீக்கம் சரியாகும்.பரங்கி பட்டையை பயன்படுத்தி தோல் வியாதிகளுக்கான மருந்து தயாரிக்கலாம். அரை ஸ்பூன் பரங்கி பட்டை சூரணத்தில் ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்க வைக்கவும். கரப்பான், சொரியாசிஸ் உள்ளவர்கள் இதை எடுத்துக்கொள்ளலாம். சர்க்கரை வியாதிக்கும் மருந்தாகிறது. பரங்கி பட்டை உடலுக்கு பலம் தருவதுடன் வலி நிவாரணியாகிறது. தேனீராக்கி குடிக்கும்போது இதயத்துக்கு பலம் கொடுக்கிறது. செரிமாணத்தை சீர்செய்கிறது. ஆஸ்துமாவுக்கு மருந்தாகிறது. நுரையீரல், ஈரலுக்கு பலம் தருகிறது. சிறுநீரக பாதையை சீர் செய்கிறது. சிறுநீரக பைகளுக்கு பலம் கொடுப்பதாக அமைகிறது. நோய் நீக்கியாக விளங்கி ஆரோக்கிய வாழ்வுக்கு உதவுகிறது. பரங்கி பட்டையை பயன்படுத்தி சொரியாசிஸ், கரப்பான் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான குளியல் பவுடர் தயாரிக்கலாம். பாசி பயிறு மாவு, சீயக்காய் பொடி, பரங்கிபட்டை சூரணம் சம அளவு எடுத்து கொள்ளவும். தண்ணீர் விட்டு குழம்பு பதத்தில் கொதிக்க வைக்க வேண்டும். அல்லது வெண்ணீர் விட்டு கலந்து எடுத்துக் கொள்ளலாம்.சொரியாசிஸ் உள்ளவர்கள் இதை தேய்த்து குளித்தால் சிவப்பு தன்மை, அரிப்பு குறையும். சொரியாசிஸ் மூலம் வரும் மூட்டுவலி குணமாகும்.பரங்கி பட்டை தோல் நோய்களுக்கு மருந்தாகிறது. தேனீராக்கி குடிப்பதன் மூலம் பால்வினை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் கிடைக்கும். மாதவிலக்கை சீராக்கும். உள் உறுப்புகளுக்கு டானிக்காக விளங்குகிறது.பரங்கி பட்டையை அப்படியே இடித்து பொடியாக சாப்பிடுவது என்பது நச்சுக்கள் நிறைந்ததாக இருக்கும். உரிய பலனை தராது. எனவே, நன்றாக பொடித்து, பாலை அடியில் வைத்து துணியில் மேலே புட்டு அவியல் போன்று  வேகவைத்து, காயவைத்து எடுத்துக் கொள்ளவும். தினமும் 100 முதல் 150 மில்லி கிராம் எடுத்துக் கொள்ளலாம். பரங்கிப் பட்டை பல்வேறு நோய்களுக்கு மருந்தாகிறது.

No comments:

Post a Comment