நற்றிணை அறக்கட்டளை நடத்தும் மாணவ மாணவியருக்கான பேச்சுப்போட்டி

நற்றிணை அறக்கட்டளை நடத்தும் மாணவ மாணவியருக்கான பேச்சுப்போட்டி

தினந்தோறும் இணையதளத்திலும் வாட்ஸ்அப் வழியாகவும் உலகத் தமிழர்களுக்கு பல அரிய தகவல்களை வழங்கிக் கொண்டிருக்கிறது நற்றிணை.
தனது
525-வது (29-10-2016),
 550-வது (23-11-2016),
575 -வது (18-12-2016) பதிவுகளை முன்னிட்டு இந்த 3 நாட்களிலும் பள்ளி மாணவ மாணவியருக்கு பேச்சு போட்டிகளை நடத்துகிறது.
தண்ணீரைப் பாதுகாப்போம், தமிழகத்தை தலைநிமிர்த்துவோம் -என்ற தலைப்பில் 5 நிமிடங்களுக்கு மிகாமல் பேசி ஒலிப்பதிவு செய்து 8220999799 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலமாகவோ அல்லது info@natrinai.org என்ற முகவரிக்கு இ-மெயில் மூலமாகவோ அனுப்பலாம். MP3 அமைப்பில் ஒலிவடிவம் இருந்தால் நலம்.
இப்பதிவுகள் நற்றிணை இணையதளத்திலும் வாட்ஸ்அப் வழியாகவும் மேற்குறிப்பிட்ட நாட்களில் ஒலிபரப்பாகும். நேயர்கள் அளிக்கும் ஓட்டு எண்ணிக்கை அடிப்படையில் ஒவ்வொரு போட்டியிலும் முதல் 3 நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்க்ள். 600-வது நாளில் திருச்சியில் நடைபெறவிருக்கும் இறுதிப் போட்டியில் தேர்வாகும் மாணவ மணிகளுக்கு மெகா பரிசுகள் வழங்கப்படும்.
தலைப்பு:
தண்ணீரைப் பாதுகாப்போம்,
தமிழகத்தை தலைநிமிர்த்துவோம்

காலஅளவு:
5 நிமிடங்களுக்கு மிகாமல்

வயதுவரம்பு:
1வது பிரிவு:   5 மற்றும் 6-ம் வகுப்பு
2வது பிரிவு:  7 மற்றும் 8-ம் வகுப்பு
3வது பிரிவு:  9 மற்றும் 10-ம் வகுப்பு

ஒலிப்பதிவுகள் வந்துசேர வேண்டிய கடைசி நாள்- 27-10-2016
நற்றிணையில் ஒலிபரப்பாகும் நாள்- 29-10-2016

தொடர்புக்கு- 8220999799

E-mail: info@natrinai.org

No comments:

Post a Comment