KALVISOLAI TNPSC

Monday, 17 October 2016

நடப்பு செய்திகள் | (Current Affairs)

நடப்பு செய்திகள் | (Current Affairs)

 

சார்க் அமைப்பு-(SAARC South Asian Association for Regional Co-operation)

* 1985-ல் காட்மாண்டுவைத் (நேபாளம்) தலைமையிடமாகக் கொண்டு, சார்க் அமைப்பு தொடங்கப்பட்டது.

* தற்போது இதன் உறுப்பு நாடுகள் 8. இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், நேபாளம், பூடான், மாலத்தீவுகள், பங்காளதேஷ், ஆப்கானிஸ்தான்.

* கடைசியாக 2007-ம் ஆண்டு, இவ்வமைப்பில் இணைந்த நாடு - ஆப்கானிஸ்தான்.

* இதன் அலுவல் மொழி ஆங்கிலம்.

* நோக்கம்: தெற்காசிய பிராந்தியத்தில் உள்ள மக்களின் நலனை மேம்படுத்துதல், உள்நாட்டு விவகாரங்களில் தலையிடாமல் இருத்தல், கலாசார, சமூகப் பொருளாதார மற்றும் அறிவியல் துறைகளில் இணைந்து செயல்படுதல்.

* முதல் மாநாடு நடந்த இடம் - டாக்கா (வங்கதேசம்) 1985-ல் நடந்தது.

* 2016-ல் சார்க் மாநாடு நடைபெற உள்ள இடம் - இஸ்லாமாபாத் (பாகிஸ்தான்).

* பாகிஸ்தானின் தீவிரவாதப் போக்கினால், இந்தியா இம் மாநாட்டில் கலந்து கொள்வதைப் புறக்கணிப்பதாக தெரிவித் துள்ளது. பூடான், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளும் புறக்கணித்துள்ளது. எனவே சார்க் மாநாடு ஒத்தி வைக்கப் பட்டுள்ளது.

* சிறப்பம்சம்: SAFTA ஒப்பந்தம் - சார்க் நாடுகளுக்கிடையே வர்த்தகம் செய்யும்போது 0 முதல் 5 சதவீத அளவிற்கு மட்டுமே வரிவிதித்திட வேண்டும்.

இந்தியச் செய்திகள்

* உத்திரகாண்ட்டின் டேராடூன் நகரில், இந்தியாவின், முதல் புலிகள் தகவல் களஞ்சியம் அமைக்கப்பட்டுள்ளது.

* நாட்டின் அதிவேக ரெயிலாக, ஸ்பெயின் நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட, குறைந்த எடை மற்றும் நவீன தொழிற்நுட்பம் கொண்ட 'டால்கோ எக்ஸ்பிரஸ்' மதுரா முதல் பல்வால் வரை சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இந்த ரெயில் மணிக்கு சராசரியாக, 180 கி.மீ. வரை செல்லக் கூடியது.

* தற்போதுள்ள இந்திய ரெயில்களில் அதிவேகமாகச் செல்லக்கூடியது 'கதிமான்' எக்ஸ்பிரஸ்.

* காஷ்்மீர் கலவரம் - காஷ்்மீரில், ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பின் தளபதிகளில் ஒருவரான பர்ஹான் வானி (வயது 22), பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து, பல நாட்களாக காஷ்மீரில் போராட்டங்கள், வன்முறைகள் நடந்து வருகின்றன.

* வெள்ளையனே வெளியேறு இயக்கம் - 75-வது ஆண்டு : வெள்ளையனே வெளியேறு இயக்கம் (ஆகஸ்டு புரட்சி) 1942-ல் ஆகஸ்டு 8-ல் நடந்து, 75 ஆண்டுகள் ஆனதை நினைவு கூர்ந்திடும் வகையில், மத்திய பிரதேசத்தில், விடுதலை வீரர் சந்திர சேகர ஆசாத்தின் பிறந்த இடமான, அலிராஜ்பூரில், பிரதமர் மோடியால், தியாக நினைவு விழா தொடங்கி வைக்கப்பட்டது.

* சாகர்மாலா திட்டம் இந்தியாவின் பெரிய மற்றும் சிறிய துறைமுகங்களை, புதிய தொழில்நுட்பங்களோடு, மேம் படுத்தும் திட்டமே, சாகர்மாலா திட்டம். இதற்காக, மத்திய அரசு, சாகர்மாலா மேம்பாட்டு நிறுவனத்தை, ரூ.1000 கோடி முதலீட்டில் உருவாக்கியுள்ளது.

* இந்தியாவின் முதல் நீர்வழி மெட்ரோ திட்டம் (Water Metro Project) கொச்சி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில், ஏற்படுத்தப்பட உள்ளது.

* இந்தியாவின் முதல் காகிதப் பயன்பாடற்ற (E-Court) நீதிமன்ற நடைமுறை, ஐதராபாத் உயர்நீதிமன்றத்தில், தொடங்கப்பட்டுள்ளது.

* யுனெஸ்கோ உலகப் பாரம்பரியப் பட்டியலில், தற்போது 3 இந்தியச் சின்னங்கள் இணைந்துள்ளன.

1. கஞ்சன் ஜங்கா தேசியப்பூங்கா, 2. நாலந்தா மகாவிகாரம், 3. சண்டிகரில் உள்ள கேபிடோல் அரங்கம்.

* மணிப்பூரில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தினை, திரும்பப் பெறக் கோரி, கடந்த 16 ஆண்டுகளாக உண்ணா விரதம் இருந்த இரோம் ஷர்மிளா, உண்ணா விரதத்தினை முடித்துக் கொண்டார். சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளார்.

* இந்திய ரெயில்வே, ரெயில் விபத்துக்களைத் தடுக்க 'டிரை நேத்ரா' என்னும் முறையினை அமுல்படுத்த முடிவு செய்துள்ளது.

* இந்தியாவின் முதல் பசுமை ரெயில் வழித்தடம், ராமேஸ்வரம் முதல் மானாமதுரை வரை (114 கி.மீ.) அமைக்கப்பட் டுள்ளது.

* சி.. தேர்வில், 2016-ல், இந்திய அளவில், முதலிடம் பிடித்த மாணவர், சேலத்தைச் சேர்ந்த ஸ்ரீராம்.

* மறைந்த அன்னை தெரசாவுக்கு, போப்பாண்டவரால் புனிதர் பட்டம் அளிக்கப்பட்டது. அன்னை தெரசாவின் இயற்பெயர் ஆக்னஸ் கோன்ஸே. இவர் கொல்கத்தாவில் ஆரம்பித்த தொண்டு நிறுவனத்தின் பெயர் 'மிஷின் ஆப் சேரிட்டி'.

* அன்னை தெரசாவுக்கு 1979-ல் நோபல் பரிசு வழங்கப்பட்டது. 1980-ல் மத்திய அரசின் உயரிய விருதான பாரத ரத்னா வழங்கப்பட்டது.

GST மசோதா (Goods Service Tax) (122-வது அரசியலமைப்பு சட்ட திருத்தம்)

* ஒரு பொருளோ, சேவையோ அதற்கு ஒரே மாதிரியான வரிவிதிப்பை ஏற்படுத்தும் நோக்கில், மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட மசோதாவே GST மசோதா.

* இன்னும் சுருங்கக் கூறினால், ஒரு பொருள்/சேவை உற்பத்தியானது முதல், நுகர்வோரைச் சென்று சேர்வது வரை, மத்திய அரசு மற்றும் மாநில அரசு விதிக்கும் பல வரிகளை ஒருங்கிணைத்து, விதிக்கக்கூடிய ஒற்றை வரிவிதிப்பின் பெயர் தான் GST மசோதா.

* GST வரிவிதிப்பு 01.4.2017 முதல் நடைமுறைக்கு வரும். GST மசோதாவை முதலில் அமுல்படுத்த உள்ள மாநிலம் அஸாம்.

* ஆதார் அட்டை வழங்கும் நிறுவனத்தின் (UIDAI Unique Identification Authority of India) புதிய தலைமைச் செயல் அதிகாரியாக அஜய் பூஷன் நியமிக்கப்பட்டுள்ளார்.

* மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ், தேசிய கட்சியாக அங்கீகாரம் பெற்றுள்ளது.

* திரிபுராவிலிருந்து புதுடெல்லி வரை செல்லும் முதல் பிராட்கேஜ் ரெயில் சேவையான, திரிபுர சுந்தரி எக்ஸ்பிரஸ் 1.8.2016-ல் தனது முதல் பயணத்தைத் தொடங்கியது.

* சர்வதேச வேளாண்மை மற்றும் பழச்சாகுபடி கண்காட்சி புதுடெல்லியில் ஜூலை 2016-ல் நடைபெற்றது.

* கழிவு மற்றும் வீணாகும் நீர் மசோதாவினை, ராஜஸ்தான் மாநில அரசு கொண்டு வந்துள்ளது. இத்தகைய மசோதா வினைக் கொண்டு வரும் முதல் மாநிலம் ராஜஸ்தான் ஆகும்.

* உலகின் மிகச்சிறந்த அரசு நிறுவனங்கள் பட்டியலில், மத்திய அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம் (CSIR) 12-ம் இடம் பிடித்துள்ளது.

* அணுக்கரு வழங்கும் நாடுகள் குழு - (NSG Nuclear Supply Group) அணுக்கரு வழங்கும் நாடுகள் குழுவில் தற்போது 48 நாடுகள் உறுப்பு நாடுகளாக உள்ளன. இந்தியா, இந்த அமைப்பில் உறுப்பினராக, முயற்சி மேற்கொண்டுள்ளது. அதே வேளையில், பாகிஸ்தானும் உறுப்பினராக விண்ணப்பித்துள்ளது. NSG-J¡ கூட்டம் 2016-ஜூன் மாதம் தென்கொரியாவின் சியோலில் நடைபெற்றது.

இந்தியா, அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் கையொப்பம் இடாததால், இந்த அமைப்பில் உள்ள, சீனா, ஆஸ்திரியா, நியூசிலாந்து, அயர்லாந்து, துருக்கி, பிரேசில் ஆகிய நாடுகள் இந்தியாவை இந்த அமைப்பில் சேர்த்திட ஆட்சேபணை தெரிவித்ததால், இந்தியா, இதில் இணையத் தற்காலிகத் தடை ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து இந்தியா NSG&J™ இணைய, முயற்சிகள் மேற்கொள்ளும்.

* மறுபயன்பாட்டு ராக்கெட் (RLV TD Reusable Launch Vehicle Technology Demonstration) பொதுவாக, செயற்கைக் கோளை, விண்ணில் ஏவியவுடன், ராக்கெட்டானது கடலில் விழுந்து விடும். அவ்வாறு கடலில் விழாமல், நிலத்தில் ராக்கெட்டை இறங்க வைத்து, மீண்டும் அந்த ராக்கெட்டை பயன்படுத்திக் கொள்ளும் தொழிற் நுட்பத்தின் பெயரே RLV-TD, இதன் மூலம் செயற்கைக் கோளை ஏவுவதற்கான செலவு கணிசமாகக் குறையும். இத்தொழிற்நுட்பம் உலகில், தற்போது அமெரிக்காவில் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்தியா, இதனைப் பயன்படுத்தும் முயற்சியில் தற்போது இறங்கியுள்ளது. ராக்கெட்டை ஏவும் நான்கு நிலை சோதனைகளில், தற்போது முதல்நிலை சோதனையில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. மற்ற சோதனைகளையும் வெல்ல, தொடர்ந்து இஸ்ரோ முயற்சி மேற் கொண்டுள்ளது.

* விவசாயிகளுக்கு மண்வள அட்டையை முதன் முதலில் வழங்கியுள்ள முதல் மாநிலம் பஞ்சாப்.

* மாநில அகன்ற அலை வரிசைத் திட்டத்தைத் தொடங்கியுள்ள முதல் மாநிலம் ஆந்திரபிரதேசம்.

* இந்தியாவில் சுனாமி எச்சரிக்கை மையம், ஐதராபாத்தில் உள்ளது.

* நாட்டின் முதல் இயற்கை விவசாய மாநிலமாக சிக்கிம் மாநிலத்தை, மத்திய அரசு அறிவித்துள்ளது.

* முற்றிலும் உள்நாட்டு தொழிற்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட, INS கட்மாட் கடற்படையில் சேர்க்கப்பட்டது.

* மக்கள் தொகைக் கணக்கெடுப்பு தலைமைப் பதிவாளராக, சைலேஸ் என்ற மூத்த ..எஸ். அதிகாரி நியமிக்கப் பட்டார்.

* தூய்மை இந்தியா திட்டத்தினை, சிறப்பாகச் செயல்படுத்திய முதல் மூன்று நகரங்கள்: 1) மைசூர், 2) சண்டிகர், 3) திருச்சி.

* சத்தீஸ்கர் மாநிலத்தில் கிராம நகரம் (ரூர்பன்) திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

* இந்தியாவின் முதல் ரெயில்வே பல்கலைக்கழகம், குஜராத் மாநிலம் வடோதராவில் அமைய உள்ளது.

* டெல்லியில் 2016-ல் நடந்த குடியரசு தின விழாவில், சிறப்பு விருந்தினராக, பிரான்ஸ் அதிபர் ஹோலண்டு கலந்து கொண்டார்.

* இந்தியாவின் முதல் புல்லட் ரெயில், மும்பை - ஆமதாபாத் நகரங்களுக்கு இடையே 508 கி.மீ. தூரத்திற்கு விடப்பட உள்ளது. இதில், தானே கிரீக் என்ற இடம் முதல் விரார் பகுதி வரை கடலுக்கு அடியில் 21 கி.மீ. தூரத்திற்கு, சுரங்கப்பாதை அமைக்கப்பட உள்ளது.

* மேற்கு வங்க மாநிலத்தின் பெயரை, ஆங்கிலத்தில் பெங்கால் என்றும், வங்க மொழியில் பங்கோ அல்லது பங்களா எனவும் மாற்றுவதற்கு, அம்மாநில அமைச்சரவை முடிவெடுத் துள்ளது.

* குஜராத்தின் புதிய முதல்வராக, விஜய் ரூபானியும், துணை முதல்வராக நிதின் படேலும் தேர்வு செய்யப்பட்டனர்.

* அருணாச்சல பிரதேசத்தின் புதிய முதல்வராக பெமாகாண்டு பதவியேற்றார். இந்தியாவின் மிக இளவயது முதலமைச்சர் இவரே ஆவார்.

* அஸாமில் உள்ள ஆற்றுத் தீவுப் பகுதியான 'மஜீலி', இந்தியாவின் முதல் தீவு மாவட்டமாக புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது.

* இஸ்ரோ, சூரியனை ஆய்வு செய்ய 'ஆதித்யா எல்-1' என்ற பெயரில் விண்கலத்தை அனுப்ப உள்ளது.

உலகச் செய்திகள்

* .நா. சபை 2016-ம் ஆண்டை 'பருப்புகள் ஆண்டாக' தீர்மா னித்துள்ளது.

* G-20 நாடுகளின் நிதியமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கித் தலைவர்கள் மாநாடு, சீனாவில் செங்கு நகரில் 25.7.2016 அன்று நடந்தது.

* G-20 கூட்டமைப்பு நாடுகளின் மாநாடு, செப்டம்பர் 2016-ல் சீனாவில் ஹோங்சுக் நகரில் நடந்தது.

* BRICS நாடுகளில் கொள்கைத் திட்டமிடலுக்கான கூட்டம், பாட்னாவில் 2016, ஜூலை 25, 26-ல் நடந்தது.

* BRICS நாடுகளின் வேலை வாய்ப்பு பணியாளர் சட்டம் தொடர்பான கூட்டம் ஐதராபாத்தில் 27.7.2016-ல் நடைபெற்றது.

* உலகில், இதுவரை பதிவு செய்யப்பட்டதிலேயே மிக அதிகபட்ச வெப்பநிலை, 2016-ம் ஆண்டில் தான், நிலவு வதாக .நா.வின் வானிலை முகமை அறிவித்துள்ளது.

* சர்வதேச ஒலிம்பிக் கவுன்சிலின், முதல் இந்தியப் பெண் உறுப்பினராக ரிலையன்ஸ் குழுமத்தைச் சேர்ந்த முகேஷ்் அம்பானியின் மனைவி நீதா அம்பானி தேர்வு செய்யப் பட்டுள்ளார்.

* அமெரிக்காவின் முதல் பெண் ஜனாதிபதி வேட்பாளராக அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த, ஹிலாரி கிளிண்டன் தேர்தலில் நிற்கிறார். அமெரிக்காவில் நவம்பர் 8, 2016 அன்று தேர்தல் நடக்கிறது.

* வடகொரியா, தென் கொரியாவினை மிரட்டும் நோக்கில், ஹைட்ரஜன் அணுகுண்டு சோதனையினைச் செய்துள்ளது. இதுவரை வடகொரியா 5 முறை இச்சோதனையினை மேற்கொண்டுள்ளது.

* ஆஸ்திரேலியாவில் புதிய பிரதமராக, மால்கம் டர்ன்புல் (லிபரல் கட்சி), ஜூலை 2016-ல் பதவியேற்றுள்ளார்.

* நேபாளத்தின் புதிய பிரதமராக, பிரசன்டா (நேபாள மாவோ யிஸ்ட் கட்சி), ஆகஸ்டு 2016-ல் பதவி ஏற்றுள்ளார்.

* இங்கிலாந்தின் புதிய பிரதமராக, தெரசா மே பதவி ஏற்றுள்ளார்.

* நீரிலும், நிலத்திலும் செல்லக்கூடிய விமானத்தினை சீனா தயாரித்துள்ளது. இதன் பெயர் 'AG 600'. இது, இவ்வகை விமானங்களில், உலகிலேயே பெரியதாகும்.

* யுனெஸ்கோவின் அமைதிக்கான கலைத்தூதராக நியமிக்கப்பட்டவர், துருக்கியைச் சேர்ந்த, புல்லாங்குழல் இசைக் கலைஞரான குட்சி எர்குனேர்.

* பிரபல நடிகர் ஜாக்கிசான், வாழ்நாள் சாதனையாளருக்கான ஆஸ்கார் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

* புவியை மிகத்துல்லியமாகப் படம் பிடிக்கும் 'காவ்ஃபென்-4' செயற்கைக்கோளை சீனா வெற்றிகரமாக ஏவியுள்ளது.

* சூரிய ஒளி மின்சாரத்தில் முழுவதும் இயங்கக்கூடிய உலகின் முதல் நாடாளுமன்றம் - பாகிஸ்தான் நாடாளுமன்றம்.

* மியான்மர் நாட்டின் புதிய அதிபராக, ஆங்சான் சூகியின், தேசிய ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த, யூ கதின் கியாவ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

* ஆஸ்கார் விருது: அமெரிக்காவின், லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற 88-வது ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில், சிறந்த நடிகருக்கான விருது - லியானார்டோ டி காப்ரியா (படம் - தி ரெவனன்ட்) சிறந்த நடிகைக்கான விருது - ப்ரீ லார்சன் (படம் - ரூம்) ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

* செவ்வாய் கிரக ஆய்வு - விண்கலப் பெயர்கள்

இந்தியா - மங்கள்யான்

அமெரிக்கா - கியூரியாசிட்டி

இங்கிலாந்து - பீகிலி-2

* 2016-ம் ஆண்டுக்கான சர்வதேச சிறந்த எழுத்தாளருக்கான 'மேன் புக்கர்' பரிசு தென்கொரிய எழுத்தாளர் ஹான் காங் என்பவருக்கு 'தி வெஜிடேரியன்' என்ற நாவலை எழுதியமைக்காக, வழங்கப்பட்டது.

* உலகின் முதல் குவாண்டம் - தகவல் தொடர்பு செயற்கைக்கோளை சீனா விண்வெளியில் அனுப்பி யுள்ளது.

* உலக அளவில், சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலில், ஜெர்மனியின் பிரதமர் ஏஞ்சலினா மெர்கல், மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார்.

* உலகிலேயே, மிகவும் நீளமான சுரங்க ரெயில்பாதை சுவிட்சர்லாந்தில் அமைக்கப்பட்டுள்ளது.

* உலகில், அதிவேக அதிதிறன் கணினி சீனாவில் உள்ளது. அதன் பெயர் 'சன்வே டாய்ஹீ லைட்'. இந்த கணினியால் வினாடிக்கு 93 ஆயிரம் டிரில்லியன் கணக்குகள் போட முடியும்.

* ஜப்பானில், டோக்கியோவின் முதல் பெண் கவர்னராக யுரிகோ கோய்கி என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

* மலேரியா காய்ச்சல் முற்றிலும் ஒழிக்கப்பட்ட நாடு இலங்கை என உலக சுகாதார அமைப்பு (WHO) அறிவித்துள்ளது.

* வியாழன் கிரகத்தை ஆராய, அமெரிக்காவின் நாசா அமைப் பால், அனுப்பப்பட்ட விண்கலத்தின் பெயர் ஜீனோ.

* சீனாவின் ஹீனன் மாகாணத்தில், உலகின் மிக உயரமான நீளமான கண்ணாடிப்பாலம் திறக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a comment