பேஸ்புக்கில் டேக் (Tag) செய்வது போல் வாட்ஸ் அப் குருப்பில் டேக் செய்யும் வசதி

பேஸ்புக்கில் டேக் (Tag) செய்வது போல் வாட்ஸ் அப் குருப்பில் டேக் செய்யும் வசதி

வாட்ஸ் அப்பில் புதிய அப்டேட் வந்துள்ளது. அதில் குருப் சேட்டில் மியூட் செய்தால் கூட நோட்டிப்கேஷன் நமக்கும் காண்பிக்கும் வகையில் இந்த புதிய அப்டேட் உள்ளது. இதனால் நோட்டிப்கேஷனில் இருந்து இனி வாட்ஸ் அப் குருப்பில் உள்ளவர்கள் தப்பிக்க முடியாது. அதாவது பேஸ்புக்கில் டேக் செய்வது போல் வாட்ஸ் அப் குருப்பிலும் இனி டேக் செய்யும் வசதி மேம்படுத்தப்பட்டுள்ளது. நீங்கள் விரும்பும் ஒருவருக்கு குருப்பில் டேக் செய்து அனுப்ப முடியும். இதனால் முக்கியமான செய்திகளை யாரும் தவறாமல் படிக்க முடியும். இப்படி Tag செய்யப்படும் நபர், க்ரூப்பை மியூட் செய்து வைத்திருந்தாலும் கூட, நோட்டிஃபிகேஷன் காட்டும். அதே போல வாட்ஸ்அப் கேமரா கொண்டு செல்ஃபி எடுத்தால், ஃபிளாஷ் செயல்படும். இது வாட்ஸ்அப் கேமராவிற்கு மட்டும்தான். மொபைல் கேமராவிற்கு கிடையாது. அதேபோல, உங்கள் மொபைலில் முன்பக்க ஃபிளாஷ் இல்லையெனில் இந்த வசதி இருக்காது. அதே போல டேக் செய்யும் இந்த அப்ளிகேஷன் ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ் பயனாளர்களுக்கு மட்டும்தான்.

Comments