KALVISOLAI TNPSC

Wednesday, 30 November 2016

9 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை | நாடா புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், நாகை, கடலூர், விழுப்புரம், திருவாரூர், புதுக்கோட்டை மற்றும் தஞ்சைமாவட்ட பள்ளிகளுக்கு இன்று(1.12.2016 ) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி பள்ளிகளுக்கும் விடுமுறை.திருவாரூர் மாவட்டத்தில் கல்லூரிகளுக்கும் விடுமுறை

வங்கக்கடலில் உருவான நாடா புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், நாகை, கடலூர் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று, நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் வானூர், மரக்காணம் வட்ட பள்ளிகளுக்கு விடுமுறை.திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கும், புதுக்கோட்டை மற்றும் தஞ்சை மாவட்டங்களில் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

அரசு ஊழியர்களின் டிஜிட்டல் பணி பதிவேடு -பள்ளி கல்வி இயக்குநர் கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி வைத்துள்ள உத்தரவு.

அரசு ஊழியர்களின் டிஜிட்டல் பணி பதிவேடு -பள்ளி கல்வி இயக்குநர் கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி வைத்துள்ள உத்தரவு. அரசு ஊழியர்களின் பணி பதிவேடு டிஜிட்டல் மயமாகிறது. கருவூலங்களில் இது கணினியில் பதிவு செய்யப்படும்.அனைத்து சார்நிலை கருவூலங்களிலும், மாவட்ட கருவூலங்களிலும் அரசு ஊழியர்களின் பணி பதிவேட்டை டிஜிட்டல் மயமாக்கும் பணி நடைபெற உள்ளது. இந்த முறையில் பணி பதிவேட்டின் பக்கங்கள் ஸ்கேன் செய்யப்பட்டு கணினியில் பதிவு செய்யப்படும். இவ்வாறு ஸ்கேன் செய்யப்பட்ட பின்னர் ஒரு பிரிண்ட் அவுட் வழங்கப்படும். அதனை அரசு ஊழியர்கள் கவனமாக சரிபார்த்து திருத்தங்கள் இருப்பின் உடன் சரி செய்யவேண்டும். இப்பணிமுடிந்த பின்னர் பணி பதிவேடு 'டிஜிட்டல் சர்வீஸ் ரெஜிஸ்டர்' என்று அழைக்கப்படும்.இந்த டிஜிட்டல் மயத்திற்காக பணி பதிவேட்டில் உள்ள முதல் பக்க சுய விபரம் மற்றும் புகைப்படம், பணி நியமன ஆணை பதிவு செய்யப்பட்ட விபரம், பணி வரன்முறை தகுதிகாண் பருவ பதிவுகள், அனைத்து கல்வி தகுதிகள் சார்ந்த பதிவுகள், கல்வி தகுதிகளின் உண்மை தன்மை சார்ந்த பதிவுகள், ஜிபிஎப், சிபிஎஸ் திட்டங்களில் சேர்ந்தமை சார்ந்த பதிவுகள், பணிக்காலம் சரிபார்ப்பு, உயர் கல்வி பயில முன்பு அனுமதி பெறப்பட்ட பதிவுகள், பணியிட மாறுதல், பதவிஉயர்வு சார்ந்த பதிவுகள், ஊதிய நிர்ணயம், தேர்வு நிலை, சிறப்பு நிலை, ஊக்க ஊதியம் சார்ந்த பதிவுகள், பல்வேறு வகையான விடுப்பு பதிவுகள், குடும்ப உறுப்பினர்கள், வாரிசு நியமன படிவங்கள் போன்றவை இவற்றில் சரிபார்க்கப்படும். இது தொடர்பாக பள்ளி கல்வி இயக்குநர் கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி வைத்துள்ள உத்தரவில், 'பள்ளி கல்வித்துறையில் பணி பதிவேட்டை டிஜிட்டல் மயமாக்கும் போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும். பதிவுகளை ஒருமுறை தனி கவனம் செலுத்தி ஆய்வு செய்த பின்னர் பணி பதிவேடுகளை பாதுகாப்பான முறையில் அந்தந்த கருவூலங்களில் சென்று டிஜிட்டல் மயமாக்கும் பணியை நிறைவு செய்ய தலைமை ஆசிரியர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கிட முதன்மை கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். முதன்மை கல்வி அலுவலகத்தில் இதற்கென ஒரு பதிவேடு தொடங்கி ஒவ்வொரு நாளும் இப்பணியை நிறைவு செய்த பள்ளிகள் சார்ந்த விபரங்களை பதிவு செய்து கண்காணித்திட வேண்டும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பள்ளி மாணவர்களுக்கு யோகா கட்டாயம் மத்திய அரசு 3 மாதங்களில் முடிவெடுக்க வேண்டும் உச்ச நீதிமன்றம் உத்தரவு

பள்ளி மாணவர்களுக்கு யோகா கட்டாயம் மத்திய அரசு 3 மாதங்களில் முடிவெடுக்க வேண்டும் உச்ச நீதிமன்றம் உத்தரவு | நாடு முழுவதும் பள்ளிகளில் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர் களுக்கு யோகாவை கட்டாயப் பாடமாக்குவது குறித்து 3 மாதங் களுக்குள் முடிவெடுக்குமாறு, மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேசிய அளவிலான யோகா கொள்கையை வகுத்து, நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல், 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு யோகா மற்றும் சுகாதாரக் கல்விக்கான பாடப் புத்தகங்களை வழங்க மனித வள மேம்பாட்டுத் துறை, என்சிஇஆர்டி, சிபிஎஸ்இ, என்சிடிஇ ஆகியவற்றுக்கு உத்தரவிடக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அஷ்வினி குமார் உபாத்யாய என்ற வழக்கறிஞர் மற்றும் டெல்லி பாஜக செய்தித் தொடர்பாளர் ஜே.சி.சேத் ஆகியோர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், அனைத்து மக்களுக்கும், குறிப்பாக குழந்தைகளுக்கு அடிப்படை சுகாதார உரிமைகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டிய கடமை மத்திய அரசுக்கு உள்ளது என கூறப்பட்டிருந்தது. இம்மனுவை விசாரித்த நீதிபதி எம்.பி.லோகுர் தலைமையிலான பெஞ்ச், இம்மனுவையே கோரிக்கை யாகக் கருதி, இவ்விவகாரம் குறித்து 3 மாதத்துக்குள் மத்திய அரசு முடிவெடுக்க வேண்டும் என உத்தரவிட்டது.

 

 

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

நல்லொழுக்க பாடத்தில் ஆசிரியர்களுக்கு 2 நாள் சிறப்பு பயிற்சி

நல்லொழுக்க பாடத்தில் ஆசிரியர்களுக்கு 2 நாள் சிறப்பு பயிற்சி | மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:- அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் 9, 10-ம் வகுப்பு மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தவும், ஒழுக்கத்தை நிலைநாட்டவும் நற்பண்புகள் கொண்ட கல்வி (நல்லொழுக்க பாடம்) வழங்கப்பட உள்ளது. அதற்கான வகுப்புகளை எடுக்கும் ஆசிரியர்களுக்கு பள்ளி பாடத்துடன் 40 வகையான நற்பண்புகளை இணைத்து கற்பித்தலும், கற்றலும் என்னும் சிறப்புப் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்காக பிரத்யேக ஆசிரியர் கையேடு தயாரிக்கப்பட்டு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஏற்கெனவே ஒதுக்கப்பட்டுள்ள நற்பண்புகள் பாடவேளையைப் பயன்படுத்தி வாரத்துக்கு ஒரு பாடம் என்ற முறையில் ஆண்டு முழுவதும் நற்பண்பு கல்வி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. இதற்காக மாநில அளவில் முதன்மை கருத்தாளர் பயிற்சி சென்னையில் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் செவ்வாய்க்கிழமை (நேற்று) நடத்தப்பட்டது. இதில் ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன (டயட்) விரிவுரையாளர் ஒருவரும், பட்டதாரி ஆசிரியர்கள் 2 பேரும் கலந்துகொண்டனர். இப்பயிற்சி புதன்கிழமையும் (இன்றும்) நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து அந்தந்த மாவட்டங்களில் டிசம்பர் 2, 3-ம் தேதிகளில் பயிற்சி நடைபெற உள்ளது. அதைத்தொடர்ந்து, ஒன்றியங்களில் டிசம்பர் 7, 8-ம் தேதிகளில் பயிற்சி நடைபெறும். இந்தப் பயிற்சியின் மூலம் 15 ஆயிரம் ஆசிரியர்களும் 20 லட்சம் மாணவ-மாணவிகளும் பயன்பெறுவர்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

சென்னையை நோக்கி புயல் 2-ந்தேதி கரையை கடக்கும் என்று அறிவிப்பு

சென்னையை நோக்கி புயல் 2-ந்தேதி கரையை கடக்கும் என்று அறிவிப்பு | சென்னையை நோக்கி வரும் புயல் 2-ந்தேதி கரையை கடக்க இருக்கிறது. இதனால் தமிழகம், புதுச்சேரியில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது. 2-ந்தேதி கரையை கடக்கிறது சென்னைக்கு தென் கிழக்கு வங்க கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இது சென்னையில் இருந்து 1,070 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து 1,030 கிலோ மீட்டர் தொலைவிலும், இலங்கையின் திரிகோணமலையில் இருந்து 720 கிலோ மீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை அடுத்த 24 மணி நேரத்தில் வலுவான காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி வடமேற்கு திசையை நோக்கி நகர தொடங்கும். இது அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற்று புயலாக மாறும். சென்னை நோக்கி வரும் இந்த புயல் 2-ந்தேதி காலை சென்னை-வேதாரண்யம் இடையே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கனமழைக்கு வாய்ப்பு இதனால் தமிழகம், புதுச்சேரி கடலோர பகுதியில் பெரும்பாலான இடங்களில் இன்று (புதன்கிழமை) இரவு முதல் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். நாளை (வியாழக்கிழமை), நாளை மறுதினம் (வெள்ளிக்கிழமை) கடலோர பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் வாய்ப்பு உள்ளது. மேலும் கடலோர பகுதிகளில் மணிக்கு சுமார் 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும். சில நேரங்களில் மணிக்கு 65 கிலோ மீட்டர் வேகத்திலும் காற்று வீசக்கூடும். எனவே இன்று இரவு முதல் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்படுகிறார்கள். அதே போல் கடலுக்கு சென்ற மீனவர்கள் உடனடியாக கரை திரும்ப அறிவுறுத்தப்படுகிறார்கள். கடலோர பகுதிகள் சென்னை, புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் உள்ளிட்ட கடலோர பகுதிகளில் மிக கனமழை பெய்யக்கூடும். அதே சமயம் திருச்சி, சேலம், கோவை, தர்மபுரி உள்ளிட்ட உள் மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

சென்னை பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா தள்ளிவைப்பு

சென்னை பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா தள்ளிவைப்பு | சென்னை பல்கலைக்கழகத்தின் இந்த ஆண்டுக்கான பட்டமளிப்பு விழா, வரும் டிசம்பர் 1-ந்தேதியன்று நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. இது அந்த பல்கலைக்கழகத்தின் 159-வது பட்டமளிப்பு விழாவாகும். இந்த நிலையில் அந்த பட்டமளிப்பு விழாவை மறுதேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பிட்ட சில நிர்வாகக் காரணங்களுக்காக டிசம்பர் 1-ந்தேதியன்று நடத்தப்பட இருந்த பட்டமளிப்பு விழா தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக சென்னை பல்கலைக்கழகத்தின் பதிவாளர் கூறியுள்ளார்.

 

 

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Tuesday, 29 November 2016

தேசிய திறனாய்வு தேர்வுக்கான விடைக்குறிப்பு வெளியாகியுள்ளது என அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

அரசு பள்ளிகளில் ஆய்வகம் மற்றும் நுாலகத்தை துாசி தட்டி சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்றும், மாணவர்களுக்கு சுகாதாரம் குறித்து வகுப்புகள் நடத்த வேண்டும்’ என்றும், பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவிட்டு உள்ளார்.

அரசு பள்ளிகளில் ஆய்வகம் மற்றும் நுாலகத்தை துாசி தட்டி சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்றும், மாணவர்களுக்கு சுகாதாரம் குறித்து வகுப்புகள் நடத்த வேண்டும்' என்றும், பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவிட்டு உள்ளார். அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, பள்ளிக்கல்வி இயக்குனர் எஸ்.கண்ணப்பன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: மாணவர்களுக்கு சுகாதார விழிப்புணர்வு ஏற்படுத்த, வழிபாட்டு கூட்டத்தில் அவர்களை பேச வைக்க வேண்டும். பேச்சு, கட்டுரை, ஓவிய போட்டிகள் நடத்த வேண்டும் திறந்தவெளியில் மலம் கழிப்பதால் நோய் பரவும் என்பதை, கிராமப்புற மாணவர்கள் மூலம் அவர்களின் பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அத்துடன், கழிப்பறைக்கு செல்லும் போது காலணி அணியும் படியும், சோப்பு பயன்படுத்தி கை கழுவும்படியும் அறிவுறுத்த வேண்டும் பள்ளி வளாகத்தில் குப்பை, தேவையற்ற பொருட்கள் குவியாமல் பார்த்து கொள்ள வேண்டும். குடிநீர் தொட்டியை அடிக்கடி சுத்தம் செய்து, மாணவர்களுக்கு துாய குடிநீரை வழங்க வேண்டும் நுாலகம், ஆய்வகம், வகுப்பறை, கணினிகள், ஆவணங்கள், மாணவர்கள் அமரும் பெஞ்ச் போன்றவற்றில் துாசி படியாமல், சுத்தமாக பராமரிப்பது அவசியம். இவ்வாறு சுற்றறிக்கையில் கூறியுள்ளார்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

ஐடிஎஸ் திட்டத்தின்கீழ் வரி செலுத்த வருவோரிடம் கறுப்பு பண மூலாதாரத்தை கேட்க வேண்டாம் வங்கிகளுக்கு ஐபிஏ அறிவுரை

ஐடிஎஸ் திட்டத்தின்கீழ் வரி செலுத்த வருவோரிடம் கறுப்பு பண மூலாதாரத்தை கேட்க வேண்டாம் வங்கிகளுக்கு ஐபிஏ அறிவுரை | தாமாக முன்வந்து கறுப்புப் பண விவரத்தை அளிக்கும் திட்டத்தின் கீழ் (ஐடிஎஸ்) வருமான விவரத்தை அளித்தவர்கள் முதல் தவணை வரியை செலுத்த வேண்டியுள்ளது. இவ்விதம் வரி செலுத்த வருவோரிடம் கறுப்புப் பணத்துக்கான மூலாதாரத்தைக் கேட்க வேண்டாம் என்று இந்திய வங்கிகள் சங்கம் (ஐபிஏ) அனைத்து வங்கிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. உள்நாட்டில் கறுப்புப் பணத்தை பதுக்கி வைத்திருப்பவர்கள் தங்களிடம் உள்ள விவரத்தை தெரிவித்து வரி செலுத்த ஐடிஎஸ் எனும் வாய்ப்பை மத்திய அரசு அளித்தது. கடந்த ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் வரை நான்கு மாதங்களுக்கு இத்திட்டம் அமலில் இருந்தது. ஐடிஎஸ் திட்டத்தில் கணக்கு தாக்கல் செய்தவர்கள் தாங்கள் தெரிவித்த சொத்தில் 30 சதவீத வரி மற்றும் அபராத வரி மற்றும் சர்சார்ஜ் உள்பட மொத்தம் 45 சதவீதத்தை செலுத்த வேண்டும். நான்கு தவணைகளில் செலுத்த அவகாசம் அளிக்கப்பட்டது. மத்திய நேரடி வரி விதிப்பு வாரி யம் (சிபிடிடி) இது தொடர்பாக ரிசர்வ் வங்கிக்கு அனுப்பியுள்ள கடிதத்தின் நகலை தனது அறிக்கை யுடன் இணைத்து அனைத்து வங்கி களுக்கும் ஐபிஏ அனுப்பியுள்ளது. சமீபத்தில் பெங்களூரில் ஒருவர் ஐடிஎஸ் திட்டத்தின்கீழ் வரித் தொகையின் முதல் தவணையை வங்கியில் செலுத்த வந்தபோது அதை வங்கி அதிகாரிகள் ஏற்கவில்லை. இது தொடர்பாக அவர் சிபிடிடி-க்கு புகார் கடிதம் அனுப்பியிருந்தார். இதைத் தொடர்ந்தே ஐபிஏ இந்த சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது. வருமான வரித்துறையின் கொள்கை வகுக்கும் பிரிவான சிபிடிடி இது தொடர்பாக அனுப்பி யுள்ள கடிதத்தில் ஐடிஎஸ் திட்டத் தின் கீழ் வரி செலுத்துவோர் முதல் தவணையாக 25 சதவீதத்தை நவம்பர் 30-க்குள் செலுத்தியாக வேண்டும். ஐடிஎஸ் 2016-ன் கீழ் வரி செலுத்துவோரிடம் அதைப் பெறுவதற்கான கால வரை யறையை வங்கிகள் வகுத்துக் கொள்ள வேண்டும். கடைசி தவணை செப்டம்பர் 30, 2017 ஆகும். இதற்கேற்ப ஏற்பாடுகள் செய்யுமாறு வங்கிகளுக்கு சிபிடிடி அறிவுறுத்தியுள்ளது. வரித் தொகையில் 25 சதவீதம் முதல் தவணையாக இம்மாதம் செலுத்த வேண்டும். இது தொடர்பான விவரமான விளம்பரத்தை வருமான வரித்துறை நேற்று முன்னணி நாளிதழ்களில் வெளியிட்டுள்ளது. மொத்தம் 64,275 கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. மொத் தம் தெரிவிக்கப்பட்ட கறுப்புப் பணத்தின் அளவு ரூ.65,250 கோடியாகும். இதன் மூலம் அரசுக்கு ரூ.30 ஆயிரம் கோடி வரி வருமானம் கிடைக்கும்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

வங்கியில் பணம் எடுக்க கட்டுப்பாடு தளர்வு ரிசர்வ் வங்கி அறிவிப்பு

வங்கியில் பணம் எடுக்க கட்டுப்பாடு தளர்வு ரிசர்வ் வங்கி அறிவிப்பு | வங்கி கணக்கில் இருந்து வாடிக்கையாளர்கள் தற்போது வாரத்துக்கு ரூ.24 ஆயிரம் வரை எடுக்க அனுமதிக்கப்படுகிறார்கள். இந்த கட்டுப்பாடு காரணமாக வங்கியில் பணத்தை 'டெபாசிட்' செய்ய வாடிக்கையாளர்கள் தயங்கியதாக தெரியவந்தது. எனவே பல்வேறு அம்சங்களையும் கருத்தில் கொண்டு பணப்புழக்கத்தை அதிகரிக்கும் வகையில், வங்கி கணக்கில் இருந்து வாடிக்கையாளர்கள் பணம் எடுப்பதற்கான கட்டுப்பாட்டை தளர்த்தி ரிசர்வ் வங்கி நேற்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதன்படி, தற்போது வரையறுக்கப்பட்டுள்ள தொகையை (ரூ.24 ஆயிரம்) விட கூடுதல் தொகையை எடுத்துக்கொள்ள அனுமதிப்பது என்று முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. அப்படி எடுக்கும் போது அந்த தொகை 2,000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளாக கிடைக்கும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்து இருக்கிறது.

 

 

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

‘யு.ஜி.சி.’ ‘நெட்’ தேர்வு எழுதுபவர்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் சென்னை கலெக்டர் அறிவிப்பு

'யு.ஜி.சி.' 'நெட்' தேர்வு எழுதுபவர்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் சென்னை கலெக்டர் அறிவிப்பு | சென்னை கலெக்டர் .மகேஸ்வரி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மத்திய அரசின் இடைநிலை கல்வி வாரியம் மூலம் 22.1.2017 அன்று நடைபெற உள்ள யு.ஜி.சி./ நெட் தேர்வு எழுதுபவர்களுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. இந்த பயிற்சியில் 40 வயதுக்குட்பட்ட முதுநிலை பாடப்பிரிவை சேர்ந்த வரலாறு, கணிதம், தமிழ், ஆங்கிலம் பயின்ற முதுநிலை பட்டதாரிகள் வயது சான்று, சாதி சான்று, கல்வி சான்று ஆகியவற்றின் நகல்களுடன் அடுத்த(டிசம்பர்) மாதம் 5, 6 ஆகிய இரு நாட்களில் சென்னை கிண்டி தொழில் மற்றும் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரில் சென்று விபரங்களை பெற்று இலவச பயிற்சி வகுப்பு கலந்துக் கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

 

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வங்கி கணக்கில் செலுத்தப்படும் தமிழக அரசு முடிவு

அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வங்கி கணக்கில் செலுத்தப்படும் தமிழக அரசு முடிவு | அரசு ஊழியர்களுக்கான மாத சம்பள தொகையையும், ஓய்வூதியதாரர்களுக்கு பென்சன் தொகையையும் வழக்கம் போல வங்கி கணக்கில் செலுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. பண கட்டுப்பாடு தமிழகத்தில் 14 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், உள்ளாட்சி அமைப்பு ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். 1 லட்சம் தொகுப்பூதியதாரர்களும், 7 லட்சம் ஓய்வூதியதாரர்களும் உள்ளனர். இவர்களுடைய வங்கி கணக்கில் மாதந்தோறும் 30-ந்தேதி பணம் செலுத்தப்பட்டு வருகிறது. அதேபோன்று இந்த மாதமும் வங்கி கணக்கில் பணம் செலுத்துவதற்கு தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அன்றைய தினமே அவர்கள் பணத்தை எடுத்துக்கொள்ளலாம். இதுகுறித்து என்.ஜி.. சங்க தலைவர் சண்முகராஜாவிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:- வங்கி கணக்கு மூலம் அரசு ஊழியர்களுக்கு சம்பள தொகையும், ஓய்வூதியதாரர்களுக்கு பென்சன் தொகையும் வழக்கம் போல் வங்கி கணக்கு மூலம் 30-ந்தேதி வழங்கப்பட உள்ளது. வங்கிகளில் ஒரு வாரத்துக்கு 24 ஆயிரம் ரூபாய் மட்டுமே பணம் எடுக்க முடியும் என்று கட்டுப்பாடு உள்ளது. இதனை தளர்த்தினால் மட்டுமே ஒட்டுமொத்த தொகையையும் எடுக்க முடியும். ரிசர்வ் வங்கிக்கு கோரிக்கை அரசு ஊழியர்கள் மாத தொடக்கத்தில் வீட்டு வாடகை, மளிகை செலவு, பால் செலவு போன்ற குடும்ப செலவுகளை மேற்கொள்ள வேண்டி உள்ளது. எனவே அரசு ஊழியர்களுக்கு ஒட்டுமொத்த சம்பளத் தொகையையும் ரிசர்வ் வங்கி வழங்க அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

 

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Monday, 28 November 2016

இலவச ஜியோ மொபைலுக்கு ரூ. 27,000-க்கு கட்டண ரசீது? - ரிலையன்ஸ் நிறுவனம் சொல்வது என்ன?

இலவச ஜியோ மொபைலுக்கு ரூ. 27,000-க்கு கட்டண ரசீது? - ரிலையன்ஸ் நிறுவனம் சொல்வது என்ன? | ரிலையன்ஸின் ஜியோ நிறுவணம் கடந்த செப்டம்பர் மாதம் தனது 4G சிம்களை வெளியிட்டது. அறிமுக சலுகையாக தனது வாடிக்கையாளர்களுக்கு வரும் டிசம்பர் மாதம் 31-ம் தேதி வரை அளவற்ற இலவச 4G இனையதள வசதியும், இலவசமாக பேசும் வசதியையும் அளித்திருந்தது. இந்நிலையில் குறுந்தகவல் செயிலியான வாட்ஸாப்பில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவணம் கொல்கத்தாவில் உள்ள வடிகையாளர் ஒருவருக்கு, ரசீது அனுப்பியுள்ளதாக அந்த ரசீதின் புகைப்படத்துடன் தகவல் பரவி வருகிறது. அவர் 554.37 GB data உபயோகித்துள்ளதகவும், 44.4 நிமிடங்கள் பேசியுள்ளதாகவும் இதற்கு அவர் 27,718 ரூபாய் செலுத்த வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.இது குறித்து ஜியோ நிறுவணம் விளக்கம் அளித்துள்ளது. "எங்கள் நிறுவணம் வாடிக்கையாளர்களுக்கு வரும் டிசம்பர் மாதம் வரை இலவச இனையதள சேவையும், இலவச தொலைபேசி சேவையும் வழங்கியுள்ளது. தற்போது வாட்ஸாப்பில் பரவி வரும்ரசீதின் புகைப்படம் போலியானது எனவும், எங்கள் நிறுவணம் அவ்வாறு எந்தவொரு வடிக்கையாளருக்கும் ரசீது அனுப்பவில்லை" என தெரிவித்துள்ளது.இதன்மூலம் கடந்த சில நாட்களாக சமூக ஊடகங்களை கலக்கி வந்த ஜியோ புரளி முற்றுப் பெற்றுள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

அரசியல் சட்ட தினம்: நவம்பர் 26

அரசியலமைப்புச் சட்ட வரைவுக்குழுவுடன் அதன் தலைவர் அம்பேத்கர் 

சட்ட தினம் உணர்த்தும் கடமைகள்! சட்ட தின உறுதிமொழி என்பது வெறும் சடங்காக மாறிவிடக் கூடாது கே.சந்துரு இந்திய சட்ட வரலாற்றில் 26.11.1949 என்ற தேதி முக்கிய தேதியாகும். அந்த நாளில்தான் அரசமைப்புச் சட்ட இறுதி வடிவத்தினை, அரசமைப்புச் சட்டப்பேரவை தீர்மானமாக நிறைவேற்றிய நாள். 67 ஆண்டுகளுக்குப் பின்னர், சட்ட தினத்தைக் கொண்டாடிவரும் நாம், கடந்து வந்த பாதையை நினைவுகூர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. 400 ஆண்டுகள் காலனி ஆதிக்கத்தில் சுரண்டப்பட்டுவந்த மக்களுக்குக் கிடைத்த அரசியல் சுதந்திரம், அதையொட்டி உருவாக்கப்பட்ட மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசுக்கு என்றே எழுதப்பட்ட அரசமைப்புச் சட்டம், அதை உருவாக்கிய தலைசிறந்த சட்ட மேதைகளின் குழு, அக்குழுவின் தலைவராக டாக்டர் அம்பேத்கர் வீற்றிருந்தது போன்றவற்றையெல்லாம் நினைக்கும்போது மிகவும் பெருமையாக இருக்கிறது. அரசமைப்புச் சட்டத்தை எழுதுவதற்காக ஏற்படுத்தப்பட்ட குழுவின் தலைவரான அம்பேத்கர், உறுப்பினர்களின் ஓட்டெடுப்புக்கு விடும் முன்னர் தீர்மானத்துக்கு ஆதரவாக ஆற்றிய சரித்திரப் புகழ்பெற்ற உரையின் ஒரு பகுதி:- "1950 ஜனவரி 26-ம் தேதியன்று, நாம் முரண்பாடுகள் நிறைந்த வாழ்க்கையில் நுழையப் போகிறோம். அரசியலில் நமக்குச் சமத்துவம் இருக்கும். ஆனால், சமூக, பொருளாதாரத் தளத்தில் - சமத்துவமற்ற தன்மையே நீடிக்கும். அரசியலில் நாம் 'ஒருவருக்கு ஒரு வாக்கு, ஒருநெறி' என்பதை அங்கீகரிப்போம். ஆனால், நமது சமூக, பொருளாதார வாழ்க்கையில், நம்முடைய பொருளாதார, சமூக அமைப்பின் காரணமாக ஒரு மனிதனுக்கு ஒரு நெறி என்ற கோட்பாட்டைத் தொடர்ந்து மறுத்துவருவோம். இதுபோன்ற முரண்பட்ட வாழ்க்கை முறை களுடன் நாம் எவ்வளவு காலம் வாழப் போகிறோம்? நம்முடைய சமூக, பொருளாதார வாழ்க்கையில் இன்னும் எத்தனை காலத்துக்கு நாம் சமத்துவத்தை மறுக்கப்போகிறோம்? இப்படித் தொடர்ந்து மறுத்துவருவதன் மூலம் அரசியல் ஜனநாயகத்துக்குப் பேரிடர் மட்டுமே விளைவிப்போம். இம்முரண்பாடுகளை நாம் முடிந்த வரை குறைவான காலத்துக்குள் களைந்திட வேண்டும். இல்லையெனில், சமத்துவமின்மையால் அல்லலுறும் மக்களால் இம்மன்றம் மிகுந்த சிரமங்களுக்கிடையே கட்டியுள்ள அரசியல் ஜனநாயகமே தகர்க்கப் பட்டுவிடும்." சோஷலிசம் டாக்டர் அம்பேத்கர் தலைமையில் உருவாகி, உறுப்பினர்களின் முழு ஆதரவையும் பெற்ற அச்சட்டத்தின் ஆரம்ப வடிவில் சோஷலிசம் என்ற வார்த்தை எங்கேயும் பயன்படுத்தப் படவில்லை. ஆனால், அரசமைப்புச் சட்டத் தின் பல பகுதிகளில் சோஷலிசக் கூறுகள் எதிரொலித்தன. சட்டப் பிரிவு 39 நிறைவேற்றப் பட்டிருந்தால், முழுமையான சோஷலிச நாடாக இந்தியா உருவெடுத்திருக்கும். அப்பிரிவில் அரசை வழிகாட்டும் நெறிமுறைகளாகக் கூறப்பட்டிருப்பவையாவன: "பொருளாதாரச் சுரண்டலுக்கும், ஏற்றத் தாழ்வுகளுக்கும், சமத்துவமின்மைக்கும் முடிவு கட்டி, நியாயமான சமூக அமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டிய கடமையை அரசின் மேல் சுமத்துகிறது. "மக்கள் அனைவருக்கும் சமூக-பொருளாதார அரசியல் நீதி கிடைக்கக் கூடியதான சமுதாய அமைப்பினை உருவாக்கி, நல அரசை உருவாக்க அரசாங்கம் முயல வேண்டும். தேசிய வாழ்வின் அனைத்து ஸ்தாபனங்களிலும் அவ்வுணர்வு பரவ வகை செய்ய வேண்டும் என்று நெறிமுறைக் கோட்பாடுகளின் அடித்தளமாக விளங்கும். ஆண்-பெண் உள்ளிட்ட அனைத்துத் தொழி லாளர்களின் ஆரோக்கியமும் பலமும் சிறாரின் இளம்பிராயமும் தவறாகப் பயன்படுத்தாம லும், பொருளாதாரத் தேவைகளின் காரண மாகக் குடிமக்கள் தமது வயதுக்கும், வலுவுக்கும் பொருத்தமில்லாத வேலையைச் செய்யுமாறு கட்டாயப்படுத்தப்படாமலும்; சிறாரும் இளைஞரும் சுரண்டப்படாமல் காக்குமாறும் அரசு தன்னுடைய கொள்கைளை நெறிப்படுத்த வேண்டும்." சோஷலிசக் கருத்துகள் முழுவதிலும் பொதிந்துள்ள அரசமைப்புச் சட்டத்தின் அக்கருத்தை மேலும் வலியுறுத்துவதற்காக 1977-ல் திருத்தம் ஒன்று கொண்டுவரப்பட்டு, அதன்படி இந்தியா இறையாண்மை பெற்ற சோஷலிச மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசாக அறிவிக்கப்பட்டது. அந்த முகப்பு வார்த்தைகள் நான்கும் இந்தியாவைத் தாங்கி நிற்கும் நான்கு தூண்களென்று கூறலாம். இதில் ஒரு தூண் பழுதுபட்டாலும் 120 கோடி மக்களைத் தாங்கி நிற்கும் அவ்வமைப்பு தகர்ந்துவிடும் ஆபத்து உள்ளது. அரசமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்து 66 ஆண்டுகள் ஆன பின்னரும், இந்த நான்கு தூண்களும் பலவிதத்தில் தாக்கப்பட்டுள்ளன. ஜனநாயகம் எதிர்கொள்ளும் ஆபத்துகள் 1975-77-ல் அறிவிக்கப்பட்ட நெருக்கடி நிலைப் பிரகடனம், அரசமைப்புச் சட்டத்தையே குழிதோண்டிப் புதைத்துவிட்டு, ஜனநாயகத்தைக் கேலிக்குள்ளாக்கியது. பாபர் மசூதி இடிப்பும், இந்துத்துவத்தின் ஆட்சி என்ற பரப்புரையும் மதச்சார்பற்ற கொள்கைகளுக்கு வேட்டுவைத்துள்ளன. தனியார்மயமாக்கலும், உலகமயமாக்கலும் அரசமைப்புச் சட்டத்தில் பொதிந்துள்ள சோஷலிசக் கோட்பாடுகளுக்கு ஆபத்து விளைவிக்கின்றன. திருத்தப்படும் தொழிலாளர் சட்டங்கள் இதற்குச் சரியான உதாரணங்களாகும். தொழிலாளர் சட்டம் திருத்துவதற்கு முன்னாலேயே தனியார் மயமாக்கலை வரவேற்கும் உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளும், அதன் சில நீதிபதிகளின் தனிப் பட்ட கருத்துகளும் சோஷலிச அணுகுமுறை யைக் கேலிக்கூத்தாக்கிவிட்டன. சட்ட நாளை அனைத்து நிறுவனங்களும் கடைப்பிடிக்க வேண்டுமென்றும், அம்பேத் கரின் 125-வது பிறந்த நாளைக் கொண்டாட வேண்டும் என்றும் உத்தரவிட்ட மத்திய அரசின் தொடர் நடவடிக்கைகள், நம்மைக் கவலைக்குள்ளாக்குகின்றன. "இந்தியா சோஷ லிச நாடு என்பதெல்லாம் வெற்று முழக்கம். இது ஒரு முதலாளித்துவ நாடு. எனவே, நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படை இக்கருத்தை ஒட்டியே இருக்க வேண்டும்" என்று ஒரு உச்ச நீதிமன்ற நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தது வேதனையளிக்கிறது. கட்டாய இலவசக் கல்வி என்பது அடிப்படை உரிமையா என்ற கேள்வி அரை நூற்றாண்டு காலம் நீதிமன்றங்களில் எழுப்பப்பட்டு வந்தது. அதற்கெல்லாம் முடிவுகட்டும் விதமாக 2002-ல் அரசமைப்புச் சட்டம் மேலும் ஒரு முறை திருத்தப்பட்டு, 21-A என்ற பிரிவு கொண்டுவரப்பட்டது. அதன்படி 6 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் அனைவருக்கும் கட்டாய இலவசக் கல்வி என்பது அடிப்படை உரிமையாக்கப்பட்டது. ஆனால், அதற்கான சட்டமோ பத்து வருடங்களுக்குப் பின்னால் உருவாக்கப்பட்டது. புதிய சட்டத்தின்படி (2012) அரசு அக்கடமையை நிறைவேற்றும் பொறுப்பைத் தனியார்களுக்கும் தாரை வார்த்தது. 20 நூற்றாண்டுகளாகக் கல்வி கற்கும் உரிமை மறுக்கப்பட்ட பகுதியினருக்குப் புதிய வாய்ப்புகள் வழங்கப்பட்டதைக் கொண்டாடுவதற்கு முன்னரே அச்சட்டத்தின் பிரிவுகள் குற்றுயிராக்கப்பட்டன. இன்று தமிழகத்தில் 42% மாணவர்கள், கட்டணம் செலுத்தியே பள்ளிக் கல்வியைப் பயின்றுவருவதைப் பார்க்கும்போது, சட்டத் தின் அடிப்படைக்கும் சமுதாயத்தின் செயல் பாடுகளுக்கும் எட்டாத இடைவெளிதான் தெரி கிறது. புதிய நூற்றாண்டு தொடங்கிய பின்னரும், இந்நாட்டில் ஐந்தில் ஒரு பகுதியினருக்கு சமநீதி மறுக்கப்பட்டுவருவதையும், இன்னும் உலர்கழிவுகளைத் தலையில் சுமப்பது ஒரு பகுதியினரின் வேலையாக்கப்பட்டிருப்பதை யும், பெரும்பான்மையான மக்கள் இன்ன மும் வறுமைக்கோட்டின் கீழ் வாடிவருவதை யும் பார்க்கும்போது, கூரையே வானமாக்கிக் கொண்டு குடியிருக்கும் லட்சக்கணக்கான இந்தியர்களைக் காணும்போது, முன்னர் கூறிய டாக்டர் அம்பேத்கரின் கூற்றுகள்தான் மேலும் மெய்ப்பிக்கப்பட்டிருக்கின்றன. சட்ட தின உறுதிமொழி என்பது சடங்காக மாறிவிடாமல், அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் நடை முறைப்படுத்தப்பட வேண்டும். நெறிகாட்டு வழிமுறைகள் சட்ட உரிமைகளாக மாற்றப்பட வேண்டும். பொது சிவில் சட்டம் என்று ஓயாமல் குரலெழுப்பும் காவிக் கட்சியினர், அரசமைப்புச் சட்டத்தின் மற்ற பகுதிகளை வசதியாக மறந்துவிட்டது ஏனோ? - கே.சந்துரு, நீதிபதி (ஓய்வு), உயர் நீதிமன்றம், சென்னை. சோஷலிசக் கருத்துகள் முழுவதிலும் பொதிந்துள்ள அரசமைப்புச் சட்டத்தின் அக்கருத்தை மேலும் வலியுறுத்துவதற்காக 1977-ல் திருத்தம் ஒன்று கொண்டுவரப்பட்டு, அதன்படி இந்தியா இறையாண்மை பெற்ற சோஷலிச மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசாக அறிவிக்கப்பட்டது. அந்த முகப்பு வார்த்தைகள் நான்கும் இந்தியாவைத் தாங்கி நிற்கும் நான்கு தூண்களென்று கூறலாம். இதில் ஒரு தூண் பழுதுபட்டாலும் 120 கோடி மக்களைத் தாங்கி நிற்கும் அவ்வமைப்பு தகர்ந்துவிடும் ஆபத்து உள்ளது!
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

கரும்பலகையில் திறனாய்வு தேர்வு பின்நோக்கி செல்லும் கல்வித்துறை

கரும்பலகையில் திறனாய்வு தேர்வு பின்நோக்கி செல்லும் கல்வித்துறை மாணவர்களின் கற்றல் தினறாய்வு தேர்வு வினாக்களை, கரும்பலகையில் எழுதி நடத்துமாறு, வெளியிட்ட அறிவிப்பு, கல்வியாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பள்ளிக்கல்வி துறை அமைச்சர் பாண்டியராஜன் உத்தரவுப்படி, ஒன்பதாம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு, கடந்த 15ம் தேதி முதல், தினசரி தேர்வு நடக்கிறது. வகுப்பு நேரத்தில், பாடவாரியாக தேர்வு நடத்தி, மாணவர்களின் கற்றல் திறன் அறிந்து, பாடம் நடத்த உத்தரவிடப்பட்டது. வினாத்தாள் தயாரிக்கும் பணிகள், மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம் வசம் ஒப்படைக்கப்பட்டது.மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி மையம் வாயிலாக, அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களின், '-மெயில்' முகவரிக்கு, வினாத்தாள் அனுப்பப்பட்டது. ஆன்லைனில், வினாத்தாள் பள்ளிக்கு வந்ததால், அச்சிட்டு மாணவர்களுக்கு விநியோகிக்க, போதிய நிதியில்லை என, ஆசிரியர்கள் புகார் அளித்தனர். வினாத்தாள் அச்சடிப்பு குறித்து, தகவல் இல்லாததால், கல்வித்துறை அதிகாரிகளும் மவுனம் சாதித்தனர். இந்நிலையில், கடந்த, 21 ம் தேதி, மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம் சார்பில், அனைத்து, உயர் கல்வித்துறை அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. 10 கேள்விகள் இதில், 'சி.சி.., எனும் தினசரி கற்றல் திறனாய்வு தேர்வு வினாத்தாளை, ஜெராக்ஸ் எடுத்து மாணவர்களுக்கு அளிக்க வேண்டாம். வினாக்களை கரும்பலகையில் எழுதி போட்டு, மாணவர்களின் நோட்டில் விடை எழுதுமாறு அறிவுறுத்தி, மதிப்பிட வேண்டும்' என குறிப்பிட்டுள்ளது. இந்த வினாத்தாளில், பாடவாரி யாக, 10 கேள்விகள் இடம்பெற்றிருக்கும். ஒரே வரியில் சிந்தித்து விடையளிக்கும் படியாக, கேள்விகள் இருப்பதால், பெரும் ஆதரவை பெற்றது. இதற்கு, மாணவர்களுக்கு பிரத்யேக வினாத் தாள் வழங்காமல், கரும்பலகை யில் எழுதி போட்டு தேர்வு நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. கற்றல் தினறாய்வு தேர்வு வினாக்களை, கரும்பலகையில் எழுதி நடத்துவதில் நிறைய சிக்கல் உள்ளது. தொடக்கப்பள்ளி மாணவர்களின் புரிதலுக்காக, வண்ணங்கள் அறிதலுக்கான கேள்விகள் உள்ளன. இதை, கரும்பலகையில் எழுதி அறிவது சிரமம். மேலும், பொருத்துதல், இணையற்ற படங்களை கண்டறிய, ஓவியம் வரைய வேண்டியுள்ளது. இதை மாணவர்களும், நோட்டில் வரைந்து விடையளிக்க வேண்டும். ஓய்வு நேரம் இல்லை தேர்வு நடத்த, 10 நிமிடங்களே ஒதுக்கப்பட்டுள்ளன. தினசரி விடைகளை திருத்தி, மதிப்பாய்வு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே, செயல்வழி கற்றல் அட்டைகளை நிரப்புவதால், அதிக எழுத்துப்பணியால் திண்டாடுகிறோம். இதில், திறனாய்வு தேர்வை நடத்தி, மதிப்பாய்வு செய்தால், ஓய்வு நேரம் கிடைக்க வழியில்லை. இதற்கு பதிலாக, வினாத்தாளிலே விடையளிக்கும் படியாக தேர்வுத்தாள் வடிவமைத்து, பள்ளிகளுக்கு வழங்கினால், பயனுள்ளதாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தேசிய திறனாய்வு தேர்வு நவ., 28ல் விடைக்குறிப்பு

தேசிய திறனாய்வு தேர்வு நவ., 28ல் விடைக்குறிப்பு | தேசிய திறனாய்வு தேர்வுக்கான விடைக்குறிப்பு, வரும், 28ல் வெளியாகும்' என, அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.நாடு முழுவதும், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, மாநில மற்றும் தேசிய அளவில், இரு கட்ட திறனாய்வு தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இந்த ஆண்டு, மாநில அளவிலான தேர்வு, நவ., 5ல் நடந்தது.'தேர்வு வினாத்தாளுக்கு, தற்காலிக விடைக்குறிப்புகள், வரும், 28ல், வெளியாகும். அவற்றை, www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்சந்தேகங்கள் இருந்தால், இயக்குனரின், directordge.tn@nic.in என்ற முகவரிக்கு, வரும், 30க்குள் தகவல் அனுப்பலாம்' என, தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE