SCROL

Monday, November 14, 2016

10-ந் தேதி முதல் 4 நாட்களில் வங்கிகளில் ரூ.3 லட்சம் கோடி டெபாசிட் மக்களுக்கு ரூ.50 ஆயிரம் கோடி வழங்கப்பட்டு உள்ளது

10-ந் தேதி முதல் 4 நாட்களில் வங்கிகளில் ரூ.3 லட்சம் கோடி டெபாசிட் மக்களுக்கு ரூ.50 ஆயிரம் கோடி வழங்கப்பட்டு உள்ளது | 10-ந் தேதி முதல் நேற்று வரை 4 நாட்களில் மட்டும் வங்கிகளில் ரூ.3 லட்சம் கோடி டெபாசிட் செய்யப்பட்டு உள்ளது. வங்கிகள் மூலம் மக்களுக்கு ரூ.50 ஆயிரம் கோடி வழங்கப்பட்டு இருக்கிறது. ஒரு நாள் விடுமுறை ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை செல்லாது என கடந்த 8-ந் தேதி அறிவித்த பிரதமர் மோடி, மக்கள் தங்கள் கைகளில் இருக்கும் இத்தகைய நோட்டுகளை டிசம்பர் 30-ந் தேதி வரை வங்கிகளில் மாற்றிக்கொள்ளலாம் என கூறினார். அதேநேரம் வங்கிகளில் இருந்த மேற்படி நோட்டுகளை மாற்றிக்கொள்ளவும், ரூ.50, ரூ.100 போன்ற சிறிய தொகைகளுக்கான கூடுதல் நோட்டுகளை இருப்பு வைப்பதற்காகவும் 9-ந் தேதி வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. ஒருநாள் விடுமுறைக்குப்பின் 10-ந் தேதி வங்கிகள் அனைத்தும் மீண்டும் திறக்கப்பட்டன. அன்று முதல் வங்கிகளை பொதுமக்கள் மொய்த்து வருகின்றனர். தங்களிடம் இருக்கும் ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை மாற்றிக்கொள்ளவும், டெபாசிட் செய்யவுமாக அலை அலையாக மக்கள் சென்று வருகின்றனர். ரூ.3 லட்சம் கோடி 'டெபாசிட்' தங்கள் அடையாள அட்டைகளை காட்டி ரூ.4,000 வரை பணம் மாற்றி வருகின்றனர். இது ரூ.50, ரூ.100 போன்ற சிறிய தொகைக்கான நோட்டுகளாகவும், ரூ.2,000 புதிய நோட்டாகவும் வழங்கப்படுகிறது. இதைப்போல தங்கள் கணக்குகளில் இருந்து பணம் எடுக்க விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு ரசீதுகள் மூலம் ரூ.10 ஆயிரம் வரை பணமும் எடுத்துச் செல்ல முடிகிறது. கடந்த 10-ந் தேதி முதல் 13-ந் தேதி மாலை 5 மணி வரை நாடு முழுவதும் உள்ள வங்கிகளில் ரூ.3 லட்சம் கோடி மதிப்புள்ள ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் டெபாசிட் செய்யப்பட்டு இருப்பதாகவும், வங்கிகள், .டி.எம்.கள் மூலம் ரூ.50 ஆயிரம் கோடி வழங்கப்பட்டு இருப்பதாகவும் மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்து உள்ளது. இந்திய வங்கிகள் சங்கம் இவ்வாறு கடந்த 10-ந் தேதி முதல் தொடர்ந்து பணத்தை மாற்றி வரும் பொதுமக்களின் வசதிக்காக அனைத்து நடவடிக்கைகளும் வங்கிகள் எடுத்து வருவதாக இந்திய வங்கிகள் சங்கம் தெரிவித்து உள்ளது. இதைப்போல .டி.எம்.கள் அனைத்தும் புதிய ரூ.500, ரூ.2,000 நோட்டுகளை கையாளும் வகையில் .டி.எம்.கள் மாற்றியமைக்கப்பட்டு வருவதாகவும் அந்த சங்கம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. மேலும் பண பரிமாற்றத்துக்கு கிரெடிட், டெபிட் கார்டுகளையும், நெட்பேங்கிங் போன்ற எலக்ட்ரானிக் பரிமாற்ற நடைமுறைகளையும் பயன்படுத்திக்கொள்ளுமாறு பொதுமக்களையும் இந்திய வங்கிகள் சங்கம் கேட்டுக்கொண்டு உள்ளது.

No comments:

Post a Comment