10ம் வகுப்பு படித்தவர்களுக்கு இந்திய ராணுவத்தில் குருப் 'சி' பணியிடங்கள்

10ம் வகுப்பு படித்தவர்களுக்கு இந்திய ராணுவத்தில் குருப் 'சி' பணியிடங்கள்

இந்திய ராணுவத்தில் காலியாக டிரைவர் உள்ளிட்ட குருப் 'சி' பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள் விவரம்:

1. Cleaner (Male):

2 இடங்கள் (பொது).

தகுதி:

10ம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்பந்தப்பட்ட டிரேடில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். வயது: 18 முதல் 25க்குள்.2. Civilian Motor Driver (CMD):

6 இடங்கள் (பொது - 2, ஒபிசி - 1, எஸ்சி - 3).

வயது வரம்பு:

18 முதல் 27க்குள்.

தகுதி:

10ம் வகுப்பு தேர்ச்சியுடன் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 3. Camp Guard (Male):

2 இடங்கள் (பொது - 1, ஒபிசி - 1).

தகுதி:

10ம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்பந்தப்பட்ட டிரேடில் முன்அனுபவம் பெற்றிருக்க வேண்டும். வயது: 18 முதல் 25க்குள்.4. Lower Division Clerk:

1 இடம் (பொது).

தகுதி: பிளஸ்2 தேர்ச்சியுடன் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் அல்லது இந்தியில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் கம்ப்யூட்டரில் டைப்பிங் செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். 18 முதல் 25க்குள்.மேற்குறிப்பிட்ட பணிகளுக்கான சம்பளம்:

ரூ.5,200 - 20,200.

ஒபிசியினருக்கு 3 வருடங்களும், எஸ்சி., எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும் அதிகபட்ச வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

விளையாட்டு வீரர்கள் (பொதுப்பிரிவு) 18 முதல் 30க்குள் இருக்க வேண்டும்.உடற்திறன் தேர்வுகள்:

1.6 கி.மீ தூரத்தை 6 நிமிடங்களில் ஓடிக் கடக்க வேண்டும். Bent Knee Situp 20 முறை செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். செங்குத்தான கயிற்றில் 3 மீட்டர் தூரம் ஏறும் திறன் பெற்றிருக்க வேண்டும். Chinsups 5 முறை செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். 9 அங்குலம் அகலம் தாண்ட வேண்டும்.

எழுத்துத்தேர்வு, உடற்திறன் தேர்வு செய்முறை தேர்வு, திறனறி தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பின் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். எழுத்துத் தேர்விற்கு General Intelligence & Reasoning, Numerical Aptitude, General English, General Awareness ஆகிய பாடப்பிரிவுகளில் இருந்து கேள்விகள் கேட்கப்படும்.

தகுதியானவர்கள் www.persmin.nic.in/dopt asp என்ற இணையதளத்தில் மாதிரி விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கம்ப்யூட்டரில் டைப் செய்து விவரங்களை பூர்த்தி செய்து அனுப்பவும். விண்ணப்பத்துடன் உரிய சான்றிதழ்களின் நகல்களை இணைத்து அனுப்ப வேண்டும்.

விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி: The Commanding Officer,

5011 ASC BN (MT),

PIN: 905011,

C/O 56 APO

No comments:

Post a Comment