SCROL

Tuesday, November 22, 2016

புதிய ஆசிரியர் தகுதித்தேர்வு மூலம் 1000-க்கும் குறைவான பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களே நிரப்ப வாய்ப்பு.

புதிய ஆசிரியர் தகுதித்தேர்வு மூலம் 1000-க்கும் குறைவான பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களே நிரப்ப வாய்ப்பு  | புதிதாக நடத்தப்பட உள்ள ஆசிரியர் தகுதித்தேர்வு மூலம் ஆயிரத்துக் கும் குறைவான பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களே நிரப்ப வாய்ப்பிருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் கடைசியாக ஆசிரி யர் தகுதித்தேர்வு கடந்த 2013-ல் நடத்தப்பட்டது. உச்சநீதிமன்ற வழக்கு காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக தகுதித்தேர்வு நடத் தப்படவில்லை. தகுதித்தேர்வு தேர்ச்சியில் இடஒதுக்கீட்டுப் பிரிவி னருக்கு 50 சதவீத மதிப்பெண் தளர்வு, வெயிட்டேஜ் மதிப்பெண் முறையில் ஆசிரியர் நியமனம் ஆகியவை தொடர்பான வழக்கு கள் முடிவடைந்த நிலையில், ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்து வதற்கான சூழல் உருவாகி யுள்ளது. முந்தைய தகுதித்தேர்வு மூலம் பள்ளிக் கல்வித்துறையிலும் சரி, தொடக்கக் கல்வித்துறையிலும் சரி அதிக எண்ணிக்கையிலான பட்டதாரி ஆசிரியர் பணியிடங் களும், இடைநிலை ஆசிரியர் பணி யிடங்களும் நிரப்பப்பட்டுவிட்டன. ஆசிரியர்-மாணவர் விகிதாச்சார அடிப்படையில் பணிநிரவல் காரண மாக அரசு பள்ளிகளில் ஆசிரியர் காலிப்பணியிடங்கள் முற்றிலுமாக குறைந்துவிட்டன. ஏற்கெனவே பணியாற்றும் ஆசிரியர்களையே மாணவர் பற்றாக்குறை காரணமாக வேறு பள்ளிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். இந்த நிலையில், விரைவில் ஆசிரியர் தகுதித்தேர்வை நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற்பாடுகளைச் செய்து வருகிறது. இந்த புதிய தகுதித்தேர்வானது அரசு உதவி பெறும் பள்ளிகளில் சேரவும், ஏற்கெனவே பணியில் உள்ள ஆசிரியர்கள் தகுதித்தேர் வில் தேர்ச்சி பெற உதவுமே தவிர அரசு பள்ளிகளில் முன்பு போல ஆயிரக்கணக்கான பட்டதாரி ஆசிரி யர், இடைநிலை ஆசிரியர் பணி யிடங்களை நிரப்பப்படுவதற்கு வாய்ப்பில்லை என்றே கருதப் படுகிறது. இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, "அரசு பள்ளிகளில் காலி யாக இருந்த பட்டதாரி, இடைநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் அதிக எண்ணிக்கையில் முந் தைய தகுதித்தேர்வுகள் மூலம் நிரப்பப்பட்டுவிட்டன. தற்போது மாணவர் பற்றாக்குறை காரண மாக காலியிடங்களும் இல்லா மல் போய்விட்டன. பள்ளிக் கல்வித்துறையில் 500 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும், குறிப் பிட்ட சில பாடங்களில் சுமார் 450 பின்னடைவு பணியிடங்களும் (பேக்லாக் வேகன்சி) என ஆயிரத்துக்கும் குறைவான காலியிடங்களே நிரப்ப வாய்ப் பிருக்கிறது" என்று தெரிவித்தனர். இந்த ஆண்டு தகுதித்தேர்வு மூலம் சுமார் 4,500 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று பள்ளிக்கல்வி அமைச்சர் கே.பாண்டியராஜன் அறிவித் திருப்பதால் எஞ்சிய 3,500 காலியிடங்கள் தொடக்கக் கல்வித்துறை, ஆதி திராவிடர் நலத்துறை பள்ளிகள் மற்றும் மாநகராட்சிப் பள்ளிகளில் இருக் கக்கூடும். இதற்கிடையே, முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியில் சுமார் 1,600 காலியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் விரைவில் அறிவிப்பு வெளியிட இருப்பதாக பள்ளிக்கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் தெரிவித்தார்.

ALL EDUCATION NEWS ONLINE 24 x 7 NEWS

LATEST STUDY MATERIALS DOWNLOAD - CLICK HERE

LATEST QUESTION PAPERS DOWNLOAD - CLICK HERE

OUR LATEST ALL DOWNLOAD - CLICK HERE

புதிய செய்தி - விறு விறு செய்திகளுடன்...


  1. FLASH NEWS

  2. SMART NEWS

  3. EDU NEWS

  4. TNPSC NEWS

  5. TET NEWS

  6. TRB NEWS

  7. SCHOOL NEWS

  8. COLLEGE NEWS

  9. GENERAL NEWS

  10. EXAM NEWS

  11. EMPLOYMENT NEWS

  12. DATE RELATED NEWS

  13. COUNSELLING NEWS

  14. PAY AUTHORIZATION ORDER FOR SCHOOL EDUCATION DEPT

  15. DSE | DEE | G.O | ALL DOWNLOADS

  16. PROMOTION PANEL 2016 FOR SCHOOL EDUCATION DEPT

  17. SSLC STUDY MATERIALS

  18. SSLC QUESTION PAPERS AND KEY ANSWERS.

  19. PLUS TWO STUDY MATERIALS

  20. PLUS TWO QUESTION PAPERS AND KEY ANSWERS.

  21. NEET STUDY MATERIALS, QUESTION PAPERS AND KEY ANSWERS.

  22. TET STUDY MATERIALS AND QUESTION PAPERS.

  23. TRB STUDY MATERIALS AND QUESTION PAPERS.

  24. TNPSC STUDY MATERIALS AND QUESTION PAPERS.

  25. SSLC EXAM TIME TABLE | PLUS 2 EXAM TIME TABLE | UNIVERSITY TIME TABLE

  26. TRB RESULT | TET RESULT | TNPSC RESULT | SSLC RESULT | PLUS 2 RESULT | CTET RESULT | UNIVERSITY RESULT

  27. TAMIL FONTS DOWNLOAD

  28. FORMS RELATED TO SCHOOL EDUCATION DEPT

  29. ONLINE BOOK SHOP FOR TRB TET TNPSC BOOKS.

  30. RH 2016

  31. TEXT BOOKS ONLINE

  32. AUDIO MATERIALS ONLINE

  33. ONLINE TEST FOR PLUS TWO

  34. ONLINE TEST FOR COMPETITIVE EXAMS

  35. TRB ANSWER KEY | TET ANSWER KEY | TRB ANSWER KEY | TNPSC ANSWER KEY | UGC ANSWER KEY | SSLC ANSWER KEY | PLUS TWO ANSWER KEY | CTET ANSWER KEY

  36. Subscribe to Kalvisolai Regular Updates Via Facebook Page.

  37. Subscribe to Kalvisolai Regular Updates Via Facebook Group.

  38. Subscribe to Kalvisolai Regular Updates Via Facebook Timeline.

  39. Subscribe to Kalvisolai Regular Updates Via Twitter.

  40. Subscribe to Kalvisolai Regular Updates Via Google Plus.

  41. Subscribe to get Kalvisolai News Daily Via your Email

  42. Subscribe to get SSLC,PLUS TWO,TNPSC,TET,TRB STUDY MATERIALS Via your Email

  43. www.video.kalvisolai.com

  44. www.news.kalvisolai.com

  45. கல்விச்சோலை | கட்டுரைகள்

  46. கல்விச்சோலை | அரசாணைகள்

1 comment:

  1. நிலமை இப்படி இருக்க எதற்கு வெயிட்டேஜ் முறை. 15, 20 வருடங்களுக்கு முன், மதிப்பெண் வழங்கும் முறை பள்ளி கல்லூரிகளில் குறைவாகவே வழங்கப்பட்டது. ஆனால் தற்போது அனைவருமே முதல் வகுப்பு மற்றும் பி. எட்.ல் டிஸ்டிங்ஷனில் தேர்ச்சி பெறுகிறார்கள். 20 ஆண்டுகளாக பதிவு மூப்பு செய்தும், தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றும் வெயிட்டேஜ் முறையால் நாங்கள் வேலை வாய்ப்பை இழந்துள்ளோம். மீண்டும் மீண்டும் தேர்வு எழுதி, தற்போதைய மாணவர்களின் பள்ளி கல்லூரி மதிப்பெண்களோடு எங்கள் கால மதிப்பெண்களை எப்படி ஈடு செய்ய முடியும். முதுநிலை பட்டதாரிகள் தேர்வில் பதிவு மூப்பிற்கு வழங்கப்படும் மதிப்பெண்களும் டெட் தேர்வில் இல்லை. இதற்கு என்னதான் தீர்வு? வெயிட்டேஜ் முறையால் மீண்டும் தேர்வெழுதி மதிப்பெண்ணை சமன் செய்ய முடியாது. டெட் தகுதி தேர்வானது முன் பின் படித்த மாணவர்களுக்கும் இனி படிக்க இருக்கும் மாணவர்களுக்கும் பாரபட்சமற்ற பொது மதிப்பீட்டு வழங்கு முறையாக இருப்பதால் வெயிட்டேஜ் முறை தேவையற்றது.இதனால் அரசு உதவி பள்ளிகளிலும் நாங்கள் வேலை வாய்ப்பை இழக்கிறோம்.எனவே கருணைஅடிப்படையில் பதிவு மூப்பில் 25, 30 வருடங்களாக காத்திருக்கும் எங்களுக்கு என்ன தீர்வு?

    ReplyDelete