SCROL

Monday, November 14, 2016

பரோடா வங்கியில் 1039 சிறப்பு அதிகாரி பணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பரோடா வங்கியில் 1039 அதிகாரி பணிகள் | பரோடா வங்கியில் 1039 சிறப்பு அதிகாரி பணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. முதுநிலை படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் |இது பற்றிய விவரம் வருமாறு: பேங்க் ஆப் பரோடா வங்கி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றாகும். மும்பையை தலைமை இடமாக கொண்டு செயல்படும் இந்த வங்கியில் ஸ்கேல் 1, 2, 3, 4 தரத்திலான சிறப்பு அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 1039 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். பணிப் பிரிவு வாரியாக... ஜூனியர் மேனேஜ்மென்ட் கிரேடு (ஸ்கேல்-1) - 66 இடங்கள், மிடில் மேனேஜ்மென்ட் கிரேடு (ஸ்கேல்-2) - 676 பணியிடங்கள், மிடில் மேனேஜ்மென்ட் கிரேடு (ஸ்கேல் -3) -256 பணியிடங்கள், சீனியர் மேனேஜ்மென்ட் கிரேடு (ஸ்கேல் 4) - 41 பணியிடங்கள் உள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பு பவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்...

வயது வரம்பு:

ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு வேறுபடுகிறது. அதிகபட்சம் 40 வயதுடையவர்களுக்கும் பணி உள்ளது. அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வும் அனுமதிக்கப்படுகிறது.

கல்வித் தகுதி:

சி.., எம்.பி.. படிப்புடன் நிதி, சி.எப்.., .சி. டபுள்யு.., சி.., மார்க்கெட்டிங் டிப்ளமோ படித்தவர்கள், எம்.பி.., எக்னாமெட்ரிக்ஸ், ஸ்டாடிஸ்டிக்ஸ், ரிஸ்க் மேனேஜ்மென்ட், டேட்டா சயின்ஸ், மேத்ஸ், எக்னாமிக்ஸ், பினான்சியல் என்ஜினீயரிங் போன்ற முதுநிலை படிப்பு படித்தவர்களுக்கு பணி வாய்ப்புள்ளது. அந்தந்த பணிக்கான சரியான வயது வரம்பு, கல்வித்தகுதியை இணைய தளத்தில் பார்க்கலாம்.

தேர்வு செய்யும் முறை:

ஆன்லைன் தேர்வு, குழு கலந்துரையாடல், தனிநபர் நேர்காணல், சைகோமெட்ரிக் தேர்வு ஆகியவற்றுக்கு உட்படுத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

கட்டணம் :

பொது மற்றும் .பி.சி. பிரிவினர் ரூ.600 மற்றும் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மாற்றுத்திறனாளிகள் ரூ.100 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். இறுதியில் பூர்த்தியான விண்ணப்பத்தை பிற்கால உபயோகத்திற்காக கணினிப்பிரதி எடுத்து வைத்துக் கொள்ளவும். ஆன்லைன் விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி நாள் 29-11-2016.விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.ba-n-k-o-f-b-a-r-o-da.com என்ற இணைய தள முகவரியைப் பார்க்கலாம்.

No comments:

Post a Comment