முன்னணி வங்கிகளில் 1103 அதிகாரி வேலை

முன்னணி வங்கிகளில் 1103 அதிகாரி வேலை | ஸ்டேட் வங்கி மற்றும் .டி.பி.. வங்கிகளில் அதிகாரி பணிக்கு 1103 இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இவை பற்றிய விவரம் வருமாறு:-

 

ஸ்டேட் வங்கி:

இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்று ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (எஸ்.பி..). தற்போது இந்த வங்கியில் சிறப்பு அதிகாரி பணிக்கு 103 பேரை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அக்யூசிசன் ரிலேசன்சிப் மேனேஜர், ரிலேசன்ஷிப் மேனேஜர், ஸோனல் ஹெட், கம்ப்ளையன்ஸ் ஆபீசர், இன்வெஸ்ட்மென்ட் கவுன்சலர்ஸ் போன்ற அதிகாரி பணியிடங்கள் உள்ளன. அதிகபட்சமாக ரிலேசன்ஷிப் மேனேஜர் பணிக்கு 55 இடங்களும், அக்யூசிசன் ரிலேசன்ஷிப் மேனேஜர் பணிக்கு 34 இடங்களும் உள்ளன. இதர அதிகாரி பணிகளுக்கு ஒருசில பணியிடங்கள் உள்ளன. 1-12-2016 தேதியில் 40 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு பணிகள் உள்ளன. அந்தந்த பணிக்கான வயது வரம்பை இணையத்தில் பார்க்கலாம். விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு பிரிவில் குறைந்தபட்சம் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தகுதிகளின் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டு, தனிநபர் நேர்காணலுக்கு உட்படுத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விருப்பம் உள்ளவர்கள் ரூ.600 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.100 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம். முதலில் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். இதற்கு கடைசிநாள் 12-12-2016-ந் தேதியாகும். பின்னர் பூர்த்தியான விண்ணப்பத்துடன், தேவையான நகல்கள் இணைத்து குறிப்பிட்ட முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். நகல் விண்ணப்பம் 16-12-2016-ந் தேதிக்குள் சென்றடைய வேண்டும். விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.statebankofindia.com மற்றும் www.sbi.co.in ஆகிய இணையதள முகவரிகளை பார்க்கலாம்.

 

.டி.பி.. 1000 பணியிடங்கள்:

இந்திய தொழிற்சாலைகள் வளர்ச்சி வங்கி சுருக்கமாக .டி.பி.. எனப்படுகிறது. தற்போது இந்த வங்கி கிளைகளில் உதவி மேலாளர் (கிரேடு-) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. மொத்தம் 1000 பேர் தேர்வுசெய்யப்படுகிறார்கள். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 1-10-2016 தேதியில் 20 முதல் 28 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றம் .பி.சி. பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வுகள் அனுமதிக்கப்படுகிறது. ஏதேனும் ஒரு பிரிவில் குறைந்தபட்சம் பட்டப்படிப்பை 60 சதவீத மதிப்பெண்களுடன் நிறைவு செய்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் தேர்வு மற்றும் தனிநபர் நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் குறிப்பிட்ட கட்டணம் செலுத்தி இணையதள விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம். 9-12-2016-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். இதற்கான ஆன்லைன் தேர்வு 3-2-2017-ந் தேதி நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கவும் விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.idbi.com என்ற இணையதள முகவரியைப் பார்க்கலாம்.

No comments:

Post a Comment