SCROL

Wednesday, November 16, 2016

கோயில் திருப்பணி, பொக்கிஷங்கள் பாதுகாப்பு பல்துறை வல்லுநர்கள் டிச. 15 வரை விண்ணப்பிக்கலாம்

கோயில் திருப்பணி, பொக்கிஷங்கள் பாதுகாப்பு பல்துறை வல்லுநர்கள் டிச. 15 வரை விண்ணப்பிக்கலாம் | கோயில்களில் திருப்பணி, பொக்கிஷங் கள் பாதுகாப்பு உள்ளிட்டவற்றுக்கு பல்வேறு துறைகளைச் சேர்ந்த வல்லுநர்கள் டிசம்பர் 15-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறநிலையத்துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கோயில்கள் தொடர்புடைய பல்வேறு நிகழ்ச்சிகள், திருப்பணி செய்தல், கலை பொக்கிஷங்களை பாதுகாத்தல், பண்பாட்டு சின்னங்களை பராமரித்தல் ஆகியவற்றுக்காக வல்லுநர்களின் விவர அறிக்கைகளைப் பெற்று, அவற்றை முறையாக செயல்படுத்த இந்து சமய அறநிலையத்துறை முடிவெடுத்துள்ளது. இதற்காக பல்வேறு துறைகளில் அனுபவம் வாய்ந்த வல்லுநர்கள், கோயில் பட்டியலில் சேர்க்கப்படுகின்றனர். இதில் இணைய விரும்புவோர் 'www.tnhrce.org' என்ற இணையதளத்தில் இருந்து விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான காலக்கெடு முதலில் நவம்பர் 15-ம் தேதி என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது கோயில் தொடர்புடைய மேலும் பல்வேறு துறை வல்லுநர்களை சேர்க்க முடிவு எடுத்துள்ளதால், கடைசி தேதி டிசம்பர் 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட் டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment